அமெரிக்க இசை நட்சத்திரம் கெல்லிக்கு ஜாமீன் மறுப்பு


சிறுமிகள் பாலியல் பலாத்காரம்: அமெரிக்க இசை நட்சத்திரம் கெல்லிக்கு ஜாமீன் மறுப்பு

அமெரிக்காவில் வசித்து வருபவர் இசை நட்சத்திரம் கெல்லி என்று அழைக்கப்படுகிற ராபர்ட் கெல்லி ஆவார். இவர் ‘ஆர் அண்ட் பி’ என்று அழைக்கப்படுகிற ‘ரிதம் அண்ட் புளூஸ்’ இசையில் பிரபலமானவர். இவர் மீது ஏராளமான செக்ஸ் புகார்கள் குவிந்துள்ளன. பெண்களையும், சிறுமிகளையும் பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார் என்பதுதான் குற்றச்சாட்டு. இவர் எல்லா குற்றச்சாட்டுகளையும் மறுத்து வருகிறார்.

ஆனாலும் கடந்த மாதம் இவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

சிகாகோ, புரூக்ளின் கோர்ட்டுகளில் கெல்லிக்கு எதிராக 2 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. அவற்றில் கெல்லியும், அவரது கூட்டாளிகளும் சிறுமிகளை வேலைக்கு அமர்த்தி, கடத்திக்கொண்டு போய் பாலியல் பலாத்காரம் செய்ததுடன் ஆபாச படங்களும் எடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

வழக்குகளில் தொடர்புடைய சாட்சிகளை மிரட்டியும், பணம் கொடுத்தும் நீதித்துறை நடவடிக்கைக்கு ஊறு விளைவிக்க முயற்சித்ததாகவும் புகார் எழுந்துள்ளது.

கெல்லி சார்பில் புரூக்ளின் கோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கலானது. மனுவை விசாரித்த நீதிபதி, அவருக்கு ஜாமீன் வழங்க மறுத்து உத்தரவிட்டார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com