ஜம்மு காஷ்மீர்: மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா கைது


ஜம்மு காஷ்மீர்: மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா கைது


காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு உள்ள சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததுடன், அந்த மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது. இது தொடர்பான மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மாநிலங்களவையில் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மக்களவையில் நாளை மசோதா விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.

மத்திய அரசின்  நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. குறிப்பாக காஷ்மீர் அரசியல் கட்சிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த மாநிலத்திலும் பெரும் பரபரப்பும், பதற்றமும் நிலவி வருகிறது.
காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து விவகாரத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. எனவே அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பை உறுதி செய்ய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
இந்த நிலையில், ஸ்ரீநகரில் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தனது ஆதரவாளர்களுடன் போராட்டத்தில் ஈடுபடலாம் என்பதால் இருவரும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *