காஷ்மீரில் அதிரடி நடவடிக்கை நியாயமா? – ஆர்.கே.

Advertisements

காஷ்மீர் மற்ற மாநிலங்களைப் போல் இந்தியாவின் இறையாண்மையை ஒத்துக் கொண்டாலும், அதற்கு என்று தனியாக அரசியல் அமைப்பு சட்டத்தையும், சலுகைகளையும் பெற்றுள்ளது. அதில் ஒன்று தான்  உறுப்பு 370   மற்றும் 35 ஏ என்று சொல்லப்படும் இந்திய அரசியலமைப்பு காஷ்மீருக்காக கொடுக்கப்பட்ட சலுகைகளை விவரிக்கிறது.

இந்தியாவின் தலைபோல் காட்சி தரும் ஜம்மு காஷ்மீர் என்றுமே இந்தியாவுக்கு ஒரு பிரச்னையாகவே இருந்து வந்துள்ளது. காரணம் காஷ்மீர் ஒரு பிரச்னைக்குரிய பகுதி என்று பலராலும் 1947 ஆம் ஆண்டு முதல் கருதப்பட்டு வருகிறது.

இச்சட்டம் குறிப்பாக அவர்களின் நிலங்களின் மேல் உள்ள உரிமைகளை உறுதிப்படுத்துகிறது. 1947 ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்த பொழுது காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி அல்ல. அது பிறகாக அப்பிரந்தியத்தை ஆண்டு கொண்டிருந்த இராஜா ஹரிசிங் என்பரால், பாகிஸ்தான் படையெடுப்பை  எதிர்க்க முடியாமல் இணைத்துக் கொண்டதே. அச்சமயம் காஷ்மீருக்கு என்று பிரத்யோக உரிமைகளை இந்திய அரசியமைப்பு சட்டத்தில் ஏற்றுக் கொண்டு இது நாள் வரை அது  அமலில் இருந்து வந்தது.

கஷ்மீரில் கஷ்மீரி அல்லாதவர் நிலங்களை வாங்க முடியாது. இந்திய அரசாங்கம்  அங்கு தனது வளர்ச்சி திட்டங்களை நேரடியாக செய்ய முடியாது. அவர்களுக்கான நிதியை ஒதுக்க முடியும்.  அதை  அந்த மாநிலத்தை ஆள்பவர்களை செலவு செய்வார்கள். அதே சமயம் தனியாக அவர்களுக்குகென்று தேசிய கொடியும் மற்றும் அரசியல் அமைப்பு சட்டத்தையும் கொண்டுள்ளனர். இந்த 370 அரசியல் உறுப்பு தற்காலிகமானது என்றாலும் இதுநாள் வரையில் நடைமுறையில் இருந்து வந்தது.

தற்போது பாஜக இச்சட்டத்தை காஷ்மீருக்கு இல்லை என்று அறிவித்துள்ளது. இச்சட்டத்தின் சலுகைகள் இனி காஷ்மீருக்கு பொருந்தாது.  அது  மற்ற மாநிலங்களைப் போல் ஒரு மாநிலமே என்றும் தற்போது அம்மாநில அந்தஸ்தும் நீக்கப்பட்டு ஜம்மு மற்றும் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதி ஆகிய இருபகுதிகள்  ஒரு  யூனியன்  பிரதேசமாகவும்,  லடாக்  மற்றோரு  யூனியன் பிரதேசமாகவும் காஷ்மீர் இரு பெரும்  பிரிவாக பிரிக்கப்பட்டு மத்திய அரசு அறிவித்துள்ளது.

இப்படியாக காஷ்மீர்  தன் மாநில அந்தஸ்தை இழந்து இரு யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டுள்ளது.  கலவர பூமியாக இருந்த காஷ்மீர் 1 லட்சம் இராணுவ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு இச்சட்டம் இல்லாதக்கப்பட்டுள்ளது.

தற்சமயம் ஊரடங்கு உத்தரவும், முக்கிய தலைவர்கள் கைதும், தொலைதொடர்பு துண்டிப்பும் ஆக காஷ்மீர் ஒட்டு மொத்த இந்தியாவில் இருந்தும் துண்டிக்கப்பட்டுள்ளது. தற்சமயம் இயல்பு நிலை சிறிது சிறிதாக திரும்புவதாக சொல்லப்படுகிறது.

பல ஆயிரக்கண்கான பொதுமக்களும், இராணுவ வீரர்களும் அங்கு நடைபெறும் தீவிரவாதத்தாலும், பயங்கரவாதத்தாலும், பிரிவினவாத்தாலும்  பாதிக்கப்பட்டு  வந்த நிலையில், இம்மாற்றம் எந்தளவு இந்திய அரசுக்கு கைகொடுக்கும் என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டியுள்ளது.

எனினும் நரேந்திர மோடி அரசு எடுத்த துணிச்சலான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. இதில் கையாளப்பட்ட நடைமுறை குறிப்பாக அம்மாநில மக்களின் கருத்தை அறியவில்லை என்று கூறப்படுகிறது. இது பெரிதும் விமர்சிக்கப்பட்டாலும் எடுத்த நடவடிக்கையை ஆச்சரியமாகவே இந்தியாவும், உலக நாடுகளும் பார்த்து வருகின்றன.

370 மற்றும் 35ஏ என்னும் இச்சட்டங்களை  இல்லாததாக்க மோடி அரசு சொல்லும் ஒற்றை காரணம் 370 அம்மாநில மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டிய வளர்ச்சிப் பணிக்கு தடையாக இருக்கிறது. 370 சொல்லி அங்குள்ள அரசியல்வாதிகள் பயன் பெறுகிறார்களே ஒழியே பொதுமக்கள் யாருக்கும் எந்த நிதியும் போய் சேரவில்லை. கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பில் மிகவும் அம்மாநிலம் பின்தங்கியுள்ளதற்க்கு இதுவே காரணம். ஆகவே இதை அகற்ற வேண்டியுள்ளதாக இந்திய அரசு சொல்கிறது. இதை மறுத்த பேச யாருக்கும் எந்த காரணங்களும் இல்லை என்பதே உண்மை.

ஆக இம்மாற்றத்தை நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், காஷ்மீர் மக்களின் நலனுக்காக உலக மக்களே ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

You may also like...

Leave a Reply