சட்டப்பிரிவு 370 ரத்து-அரசாணை வெளியீடு


சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 ரத்து: அரசாணை வெளியீடு

புதுடெல்லி,
காஷ்மீர் மாநிலத்துக்கு  சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டு மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. பாராளுமன்றத்தில் இரு அவைகளிலும் இதற்கான மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டன.  

இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டதை அடுத்து ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக மசோதா அனுப்பி வைக்கப்பட்டது.

ஜனாதிபதி   ஒப்புதல் அளித்ததை அடுத்து, ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370வது சட்டப்பிரிவை நீக்கியதற்கான அரசாணையை மத்திய சட்டத்துறை அமைச்சகம் வெளியிட்டது. மத்திய அரசின் அரசிதழில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com