அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

Advertisements

v


அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவு


அமெரிக்காவின் ஒரிகன் மகாணத்தின் கடற்கரை பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவாகியுள்ளது. இது பாண்டன் நகரிலிருந்து 150 மைல் தொலைவிலும், பசுபிக் கடலின் 9 மைல் ஆழத்திலும் ஏற்ப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலநடுக்கம் ஒரிகன் நகரப்பகுதிகளில் உணரப்பட்டதாக கூறப்படுகிறது. 
உள்ளூர் நேரப்படி,  காலை 8.00 மணியளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. மேலும், நிலநடுக்கத்தால் எந்த வித உயிர் சேதமும், பொருட்சேதமும் ஏற்ப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுனாமி எச்சரிக்கை எதுவும் தற்போது வரை தெரிவிக்கப்படவில்லை.

You may also like...

Leave a Reply