சந்திராயன் 2 வெற்றியா? தோல்வியா? – ஆர்.கே.

Advertisements

இந்திய விண்வெளி ஆராய்சி மையமான இஸ்ரோவால் சந்திரான் 2 நிலவு பயணத்திட்டம்  திட்டமிடப்பட்டு,  கடந்த  செப்,7 ம் தேதி நிலவில் தரையிறங்கி சாதனை படைப்பதாக இருந்தது.  இதற்காக விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் இதில் இணைக்கப்பட்டது. இதில் விஷேசம் என்ன வென்றால் நிலவின் துருவப்பகுதியில் தரையிறக்கப்பட முடிவு செய்யப்பட்டது. இது மிகப் பெரும் சாவலான காரியம். முன்னேறிய நாடுகளான அமெரிக்கா, இரஷ்யா, சீனா போன்ற நாடுகள் கூட இப்பரிசோதனைக்கு  தங்களை உட்படுத்திக் கொள்ளவில்லை காரணம் மிகவும் கரடுமுரடான நிலப்பகுதியை கொண்டது நிலவின்  துருவப்பகுதி. ஆபத்தானது. இலகுவாக தரையிறங்க ஏற்ற நிலப்பரப்பு என்பது இல்லை.

நிலவின் தென்துருவப்பகுதியில் நீர் ஆதராம் இருப்பதாக வெளிவந்த  பல்வேறு தகவல்களை உறுதி செய்து, அது மனித குலத்திற்கு சாதகமாக இருக்குமா? என்பதை கண்டறிய செய்யப்பட்ட ஏற்பாடு இது. இம்முயற்சி வெற்றி  பெற்றால் அது துருவப்பகுதியில் தரை இறங்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியாவுக்கு கொண்டு வந்து சேர்த்திருக்கும்.

கிட்டத்தட்ட  4 லட்சம் கி.மீ. பயணம் செய்து, 
செப், 7-ம் தேதி 1.40 மணிக்கு தரையிறங்க நேரம் குறிக்கப்பட்டு, அதன்படி பயணப்பட்டுக் கொண்டிருந்தது சந்திராயன் 2.  முடிவு செய்யப்பட்ட பயணத்திட்டத்தின் படி சரியாக செயல்பட்டுக் கொண்டிருந்த சந்திரான் 2 பயணம்,  நிலவில் தரையிறங்க 2 கிலோ மீட்டர் இருக்கும் நேரத்தில் தனது கட்டுப்பாட்டு மையத்தின் தொடர்பை துண்டித்துக் கொண்டது. அங்கிருந்து வர வேண்டிய சிக்னல் வரவில்லை மேலும் அது பயணப்பட வேண்டிய பாதையில் இருந்து விலகி சென்றதும் கண்கூடாக காணப்பட்டது. 99 சதவீதம் சரியாக திட்டமிட்டபடி சென்ற சந்திராயன் கடைசி நிமிடங்களில் தனது பணியை சரியாக செய்யவில்லை என்பதே முடிவாக காணப்பட்டது. கடைசி 15 நிமிடங்கள் சோதனையான காலக்கட்டம். அதில் வெற்றி அடைந்தால் தான் நிலவில் இலகுவாக தரையிறங்கிய பெருமையை நாடு பெற்றியிருக்கும்.

130 கோடி இந்திய மக்களின் ஆவலாக எதிர்பார்க்கப்பட்ட கனவு திட்டம் முழுமையாகவில்லை.  சந்திராயனின் ஆர்பிட்டர் சரியாக நிலவின் சுற்றுப்பாதையில் ஒரு வருட காலம் இயங்கும் நிலையில் சுற்றி வருவது ஆறுதலான விஷயம். அதில் ஏற்றப்பட்டு சென்ற விக்ரம் லேண்டர் சரியாக தரையிறங்கவில்லை. தற்போது அது சரியாக தரையிறங்காததற்கான காரணத்தை விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகிறார்கள்.

பாரத பிரதமர் மோடி இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டர்.  நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.  இஸ்ரோ பெங்களுர் தரை கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து,  நிகழ்வுகள்  ஆராயப்பட்டன.

விக்ரம் லேண்டர் சரியாக தரையிறங்காதது அறிந்து விஞ்ஞானிகள் சஞ்சலம் அடைந்தனர். அவர்களுக்கு ஆறுதலாக இருந்தது பிரதமரின் உரை. விஞ்ஞானம் என்பதே பரிசோதனை முயற்சிதான். அந்த பரிசோதனையில் தான் வெற்றிகள் வருகின்றன.  ஆகையால்  பரிசோதனை முயற்சி தொடர்ந்து நடைபெறும்.  அதற்கு  அரசு  ஆதரவு,  மக்களின் ஆதரவு உள்ளது என்று விஞ்ஞானிகளை உற்சாகப்படுத்தி பேசினார்.  இது விஞ்ஞானிகளுக்கு ஆறுதலான விஷயமாக இருந்தது.

பல்வேறுகட்ட சோதனைகளுக்குப் பின் இத்தகைய பின்னடைவு ஆராயப்பட வேண்டிய ஒன்றுதான். இருந்தும் பல்வேறு நாடுகள் பல்வேறு முயற்சிகளுக்குப் பின்பே வெற்றி அடைந்துள்ளன. ஆகையால் அடுத்த முயற்சியில் நாடு வெற்றி அடையும் என்று நம்பலாம்.

யாரும் இறங்க தயங்கிய இடத்தில் இறங்க முற்பட்டது முதல் வெற்றி. அதில் இறுதி கட்ட தரையிறக்கம் வரை சென்றது இரண்டாவது வெற்றி. மிகக் குறைந்த செலவில் தரையிறக்கத்தை நடத்திக் காட்ட முற்பட்டது மூன்றாவது வெற்றி. சந்திராயன் 2 தொடர்ந்து செயல்பட்டு வருவது நான்காவது வெற்றி. இப்படியாக பல வெற்றிகள் இதில் தடம் பதித்துள்ளன. ஆகையால் தான் இஸ்ரோ தலைவர் சிவன் இது கிட்டத்தட்ட 100 சதவீத வெற்றிதான் இப்பயணம் என்று அறிவித்துள்ளார்.

நிலவுப்பயணம் என்பது 1969 ல் அமெரிக்க தன் காலடி தடத்தை பதித்ததில் இருந்து, ஒரு கனவு பயணமாகவே ஒவ்வொரு நாட்டிற்கும் உள்ளது. சமீபத்தில் கூட இஸ்ரேல் தன் முயற்சியில் தோல்வியை தழுவியது. இப்படியாக நிலவுப்பயணம் என்பது இன்றும் ஒரு சவாலான பணியாகத்தான் உள்ளது-

இரஷ்யா நமக்களித்த தொழிற்நுட்ப உதவியுடன் நாம் நிலவு பயணத்திட்டத்தில் படிப்படியாக முன்னேறி வருகிறோம். கிட்டத்தட்ட 1000 கோடி செலவில் உருவாக்கப்பட்ட இப்பயணத்திட்டம். கிட்டத்தட்ட வெற்றிதான் என்று சொல்லப்படுகிறது. நிலவில் இலகு தரையிறக்கம் நாம் நடத்திவிட்டால், பிறகு நாம் நம் இந்தியர்களை கால் தடம் பதிக்க வைக்கப் போகும் நாளும் தூரத்தில் இல்லை. ஆகையால் விஞ்ஞானிகள் ஆயராது உழைத்து நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும்.  இதில் அவர்களின் பங்களிப்பை பாராட்டுவோம். துணை நிற்போம். இப்பயணம் அனுபவ ரீதியாக ஒரு வெற்றிப் பயணமே. .

You may also like...

Leave a Reply