இராமர் கோயில் கட்டலாம். உச்சநீதிமன்ற தீர்ப்பு சரியா? – ஆர்.கே.

Advertisements
சுப்ரீம் கோர்ட்

இராமர் கோவில், பாபர் மசூதி வழக்கு 150 வருட கால  சட்ட போராட்டத்திற்குப் பிறகு ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ளது. இராமர் அயோத்தியில் பிறந்தார் என்றும். அவருக்கு கட்டப்பட்ட ஒரு கோவிலை பாபர் 1528 ஆம் ஆண்டு இராமர் கோவிலை இடித்துவிட்டு மசூதியை கட்டிவிட்டார் என்றும் வழக்கு தொடரப்பட்டது. இது பல்வேறு கட்டங்களை தாண்டி இறுதி தீர்ப்பு நவம்பர் 09 ம் தேதி வழங்கப்பட்டது.

உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் இராமருக்கு கோவில் கட்டிக் கொள்ளலாம் என்றும். ஆனால் அங்கு இராமர் கோவில் இருந்ததற்கான சான்று எதுவும் இல்லை என்றும். இதன் வாயிலாக பாபர் இராமர் கோவிலை இடித்துக் மசூதியை கட்டினார் என்பதை ஏற்க முடியாது என்றும்,  பெருவாரி மக்களின் நம்பிக்கைக்கு மதிப்பளித்து இத்தீர்ப்பு வழங்கப்படுவதாகவும் கூறியுள்ளது.

அதே நேரம் கட்டப்பட்டிருந்த பாபர் மசூதியை இடித்தது சட்டப்படி குற்றம் என்றும். இவ்வழக்குக்கும், பாபர் மசூதி இடிக்கப்பட்ட குற்ற வழக்குக்கும் சம்பந்தம் இல்லை என்றும் கூறியுள்ளது.

ஆக பாபர் மசூதியை இடித்ததாக கூறப்பட்டுள்ள அத்வானி, முரளி மனோகர் ஜோஷி மற்றும் சங் பரிவார் அமைப்புகள் மீதான அந்த குற்ற வழக்கில் இருந்து அவர்கள்

விடுவிக்கப்படவில்லை. அவ்வழக்கு முடிவுக்கு வரும் போது குற்றவாளிகள் யார் என்பது முடிவாகும் என்பதே உச்சநீதிமன்ற தீர்ப்பின் வழியாக உணரப்பட்டுள்ளது.

இதில்  இடம் சம்பந்தப்பட்ட பிரச்னையை மட்டுமே ஐந்து பேர் கொண்ட அரசியல் அமைப்பு பெஞ்ச் ஆய்வு செய்து தீர்ப்பை சொல்லியுள்ளது.

இது யாருக்கும் வெற்றியும் அல்ல, தோல்வியும் அல்ல என்று பிரதமர் அறிவித்துள்ளார்.  பாபர் மசூதிக்கான தொழுகை அங்கு நடைப்பெற்றதாக எதிர் தரப்பு நிருபிக்கவில்லை என்றும் கூறியுள்ளனர். ஆக இடம் இராமலல்லா அமைப்புக்கு சொந்தம் என்றும், புதிதாக நான்கு மாதத்துக்குள் இராமர் கோவிலை ஒரு டிரஸ்ட் அமைத்து அதன் பராமரிப்பில்  கோவிலை கட்டிக் கொள்ள வேண்டும் என்றும். பாபர் மசூதிக்கு 5 ஏக்கர் நிலம் கொடுக்கப்பட வேண்டும் என்றும். அதில் அவர்கள் மசூதியை கட்டிக் கொள்ளலாம் என்றும் கூறி வழக்கை முடித்து வைத்துள்ளனர்.

நாடு இத்தீர்ப்பை ஒட்டி பரபரப்பாக இருந்தாலும், எந்த ஒரு அசம்பாவிதமும் ஏற்படாதது. இந்த தீர்ப்புக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி.  முஸ்லீம்கள் சிலர் தங்களுக்கு இது இழைக்கப்பட்ட அநீதியான தீர்ப்பு என்று உச்ச நீதிமன்ற தீர்ப்பை விமர்சித்தாலும் இதைத் தாண்டி இம்மண்ணில் வாழும் முஸ்லீம்களுக்கு வேறு வழியில்லை என்றும் கூறியுள்ளனர். இது சரியான தீர்ப்பு தானா என்பது அவரவர் மனசாட்சிக்கு விட்டுவிட வேண்டியுள்ளது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com