ஜோதிகா-சசிகுமாரின் புதிய படம் பூஜை

Advertisements


நடிகர் சூர்யா தயாரிப்பில் ஜோதிகா-சசிகுமாரின் புதிய படம் பூஜை

 Facebook  Twitter  Mail  Text Size  Printஜோதிகா வித்தியாசமான கதை மற்றும் கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார். திருமணத்துக்கு பிறகு அவரது நடிப்பில் 36 வயதினிலே, காற்றின் மொழி, நாச்சியார், ராட்சசி, ஜாக்பாட், செக்க சிவந்த வானம் ஆகிய படங்கள் வந்தன.பதிவு: நவம்பர் 30,  2019 05:00 AMஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தியுடன் இணைந்து நடிக்கும் தம்பி அடுத்த மாதம் திரைக்கு வருகிறது. இந்த படத்துக்கு தணிக்கை குழுவினர் யுஏ சான்றிதழ் அளித்துள்ளனர். 
பொன்மகள் வந்தாள் என்ற படத்திலும் நடிக்கிறார். இதில் பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர். அடுத்து கத்துகுட்டி படத்தை எடுத்து பிரபலமான இரா.சரவணன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் படத்தில் ஜோதிகா நடிக்கிறார்.

இந்த படத்தில் சசிகுமாரும் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். சசிகுமார் அண்ணனாகவும் ஜோதிகா தங்கையாகவும் நடிக்கின்றனர். சமுத்திரக்கனி, சூரி, கலையரசன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். கிராமத்து பின்னணியில் உறவுகளின் வலிமையை சொல்லும் குடும்ப படமாக தயாராகிறது.
படத்தை சூர்யா தயாரிக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய இமான் இசையமைக்கிறார். படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. இதில் சிவகுமார், சூர்யா, கார்த்தி, ஜோதிகா, சசிகுமார், இயக்குனர் இரா.சரவணன் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் கலந்து கொண்டனர். படப்பிடிப்பு புதுக்கோட்டை, தஞ்சை பகுதிகளில் நடக்கிறது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com