அஷ்டமாசித்து -2

Advertisements

எவ்வளவு பெரிய பணக்காரர்களாக இருக்கிறோம் என்பதோ,ஏழையாக இருக்கிறோம் என்பதோ ஒரு விஷயமே இல்லை .

அவை எல்லாம் நிலைப்பாடுகள். எப்படிப்பட்ட நிலைப்பாட்டில் இருந்தாலும் மனதில் தெளிவு இருந்தால் ,பரவ சந்தோஷமாக வாழலாம். அந்தத் தெளிவுக்கு பக்தி மிக முக்கியம் .பணிவு அதைவிட முக்கியம்.

இந்த நிலையில் ஆழ் மனதில் எதை நினைத்தாலும் ,அது காலத்தால் கிடைக்கும் .அதற்கேற்ப செயல்படும். அந்த செயல்பாட்டு கர்மங்கள் ஆசைப்பட்டதை நமக்கு வாங்கித் தரும்.

கோடீஸ்வரனாக வேண்டுமா?

நிச்சயம் முடியும். இந்த மண்ணில் உள்ளவற்றை அனுபவிக்கவே பிறப்பெடுத்திருக்கிறோம் .யார் எவ்வளவு அனுபவித்தாலும் எதுவும் கூட போவதுமில்லை குறையப் போவதுமில்லை .

எப்பொழுது அனுபவிக்கப் போகிறோம் என்பதில் தான் அவரவர் பிராப்தி உள்ளது.பிராப்தி சித்தி காலத்தின் வசமுள்ள ஒன்று .நம் பாவ புண்ணியங்களால் உருவாகும் அதை வேகமாக பெறுவதும் உரிய காலத்தில் பெறுவதும் தெளிவானவர்களுக்கு சுலபம்.

அஷ்டமாசித்துவில் ஒன்றான இதை சில சித்த புருஷர்கள் விரைவாக பெற முதலில் தங்கள் கர்ம பலன்களை தெரிந்து கொள்வார்கள் .

பிறகு அதை வேகமாய் சமன் செய்வார் கள.் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு ஒருவருக்கு அதை பத்து நொடிக்குள் கிடைக்க வைப்பார்கள் .

பத்து வருட கடனுக்குரிய உடனே செலுத்தி அதை தீர்த்துக் கொள்கிற மாதிரி யான ஒரு விஷயம்தான் இது.

நமது பாவ புண்ணியங்களை எப்படி தெரிந்து கொள்வது. நமது பிராரப்தம் எப்படிப்பட்டது என்பதை எப்படி தெரிந்து கொள்வது என்கிற கேள்விக்கு எல்லாம் விடை சுலபம்.

ஒருவரது ஜனன ஜாதகம் தான் அவர்களது பாஸ்புக் .சரியான கணக்கு போடத் தெரிந்த ஜாதக வித்தகரிடம் காட்டினால், இந்த ஜென்மத்தில் நாம் எப்படி இருக்கப் போகிறோம் என்பதை தெரிந்து கொள்ளலாம் .

பத்து ஆண்டுக்கு சிரமம்தான் என்று ஜாதகத்தில் சொன்னால் ,அதையும் நமது நற்கருமங்களால், பக்தி சிரத்தையால் மனத்துணிவால் மாற்றலாம் .

10 ஆண்டு சிரமத்தை 10 நொடி வரை சுருக்கலாம். முடியும் .

புரிந்து கொள்வதில் தான் எல்லாம் இருக்கிறது. அடுத்து நம்பிக்கை வைப்பதில்……அதற்கும் அடுத்து தொழிவாய் சிந்திப்பதில் …..பின் செயல்படுவதில் தான் எல்லாமே உள்ளது.

விக்ரமாதித்தன் காலத்து விஷயம் இது…

விக்கிரமாதித்தன் ஒரு நாள் காட்டில் போய்க்கொண்டு இருந்தான்.

அவனுக்கு பட்சிபாஷை நன்கு தெரியும். இரண்டு பட்சிகள் ஒரு மரத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தன.

அவை இரண்டும் முனிவரிடம் சிஷ்யர்களாக இருந்தவர்கள்.

ஒரு சாபத்தால் பட்சிகள் ஆகிவிட்டன. எனவே முனிவர்களுக்கு உண்டான ஞானம் அவற்றின் பேச்சில்…….

அதில் ஒரு பட்சி கேட்டது இன்பம் என்பது எது?.

அடுத்த பட்சி சொன்னது துன்பம்தான் இன்பம் என்று…

என்ன உளறுகிறாய்? ‌என்று முதல் பட்சி திருப்பி கேட்டது.

உளறவில்லை .துன்பம் தான் உண்மையான இன்பம் .ஒருவன் கடினமாய் உழைத்து விட்டு ஓய்வு எடுப்பது ஒரு துன்பம், உண்மை இன்பமாக மாறுவது போன்றது .

அவனே இன்பமாக இருந்து பொழுதை கழித்துவிட்டு ,வறுமையில் வாட நேர்ந்தால் அது பொய்யான இன்பம் உண்மையான துன்பமாய் மாறுவது போன்றது.

நம்மையே எடுத்துக்கொள் .ஜபதபங்களில் ஈடுபட்டிருந்த நாம,் நம் முனிவரின் பேச்சைக் கேளாமல் தவறு செய்து சாபத்தால் இப்படி ஆனோம்.அதே சமயம் ஒரு கிளி நம் முனிவரைத் தொழுது மோட்ச கதியை பெற்றது. இதிலிருந்து என்ன தெரிகிறது என்று கேட்பது?

உண்மை தான் .துன்பம் தான் இன்பமாக வேண்டும் .இன்பம் துன்பம் ஆகக்கூடாது .

“எங்கிருந்து தொடங்குகிறோம் ” என்பதில் தான் உள்ளது, என்றது அது.
அதைக் கேட்டுக் கொண்டிருந்த விக்கிரமாதித்தனும் வியந்துபோனான்.

You may also like...

Leave a Reply