ஆல்பாபெட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக -சுந்தர் பிச்சை

Advertisements


ஆல்பாபெட் நிறுவனத்தின் சிஇஓ-வாக சுந்தர் பிச்சை நியமனம்

 ஆல்பாபெட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக சுந்தர் பிச்சை நியமனம் செய்யப்பட்டுள்ளார். கூடுதல் பொறுப்பாக அவருக்கு இப்பதவி வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவைச்சேர்ந்த பிரபல இணையதள தேடுபொறி நிறுவனம் கூகுள். உலக அளவில் அதிக பயனாளர்களால் பயன்படுத்தப்படும் கூகுள் நிறுவனத்தின் சிஇஓ-வாக , இந்தியாவைச்சேர்ந்த சுந்தர் பிச்சை கடந்த 2015 ஆம் ஆண்டு நியமனம் செய்யப்பட்டார்.

இந்த நிலையில், கூகுளின் தாய் நிறுவனம் என்று சொல்லப்படும் ஆல்பாபெட் நிறுவனத்தின், தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருந்த லாரிபேஜ் மற்றும் செர்ஜி பிரைன் ஆகிய இருவரும் விலகியுள்ளனர். 21 ஆண்டுகளுக்கு முன் நிறுவப்பட்ட இந்த நிறுவனத்தின் புதிய சிஇஓ-வாக சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டுள்ளார். கூடுதல் பொறுப்பாக சுந்தர் பிச்சைக்கு இப்பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இதனிடையே ஆல்பாபெட் சிஇஓ-வாக தம்மை நியமித்துள்ளதற்கு சுந்தர் பிச்சை தனது டுவிட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார். எங்களிடம் நேரம்  காலமற்ற பணி, உணர்வுகளுக்கு மதிப்பளிப்பது, ஒத்துழைப்பு கலாசாரம் உள்ளது. எனவே நிறுவனத்தை மேலும் நல்ல முறையில் நடத்துவோம் என கூறியுள்ளார்.You may also like...

Leave a Reply