அஷ்டமா சித்து-7

Advertisements

‘அரிதரிது மானிடராய் பிறத்தல் அரிது அதனினும் அரிது கூன் குருடு செவிடு நீங்கி பிறத்தல்’….. என்று நன்கு நடமாட முடிந்த மனித இனத்தைப் பற்றி அவ்வை வெகு அழகாகக் குறிப்பிடுகின்றார்.

அண்ட சராசரங்களிலும் மனிதப்பிறப்பு க்கு இணையான ஒரு பிறப்பை காணமுடியவில்லை. ஆயினும் இன்றைய உலகில் பலருக்கு எதற்காக மனிதப் பிறப்பெடுத்தோம் என்பதிலேயே குழப்பம் நிலவுகிறது.

தான் அறிய பிறப்பு என்பது தெரியாத மனிதர்களே இந்த மண்ணில் அதிகம் .எத்தனை நற்கருமங்கள் செய்திருந்தால், மனிதப்பிறப்பு வாய்க்கும் என்பது பலரால் உணர முடிவதில்லை.

நல்லவிதமாய் செல்வாக்கான சூழலில் பிறந்து சகல சுகபோகங்களுடன் வாழ்கின்றவர்களும் கூட மனிதப் பிறப்பு என்பது ஒரு அற்புதம் என்றும் வரப்பிரசாதம் என்றும் அறிவதில்லை.

நாம் நம் பிரச்னையால் திட்டமிட்டு பெற்றது இல்லை இந்த பிறப்பு .வினைகளின் தொகுப்பில் குறிப்பிட்ட கட்டங்களில் மனிதப்பிறப்பு நேரிடுகிறது .அப்படிப் பிறந்து விட்டதால் வளர்ந்து எழும் போது நாம் எங்கே எந்தத் தாயின் வயிற்றில் பிறந்தோமோ ,அந்தத் தாயின் படி மூலமே நம் மூலம் ஆகிறது. அவள் மொழியே நம் தாய்மொழி ஆகிறது .

பசிக்கிறது அதனால் சாப்பிடுகிறோம் .தூக்கம் வருகிறது அதனால் தூங்குகிறோம் .வலித்தால் அழுகிறோம் .யாராவது நம் எதிரில் தடுக்கி விழுந்தால் நம்மை அறியாமல் சிரித்து விடுகிறோம் .இங்கே எங்கேயும் வாழ்க்கை ‘தான் ‘என்கிற நம் வசத்தில் இல்லை .எப்பொழுது நம்முள் நான் யார் என்கிற ஒரு கேள்வி தோன்றி அது விஸ்வரூபம் எடுக்க தொடங்குகிறதோ அப்பொழுதுதான் முதன் முதலாக நாம் நமக்குள் இருந்து விடுபட்டு உலகை பார்க்கிறவர்களாக மாறுகிறோம்.

நான் யார் ?எதற்கு இந்தப் பிறப்பு? பரந்த இந்த உலகில் இன்னாருக்கு மகனாய் மகளாய் குறிப்பிட்ட ஓர் இடத்தில் நான் பிறந்திட எது காரணம்?

நான் இன்னும் எவ்வளவு காலம் உயிரோடு இருப்பேன்? இப்படி எல்லாம் கேள்விகளை எழுப்பும் என் மனம் இந்த உடம்புக்குள் எங்கே இருக்கிறது?

இந்த மனதிற்காகத்தான் இந்த உடம்பா? இல்லை இந்த உடம்புக்காக மனதா?.

இப்படி கேள்விகள் பெருகிக்கொண்டே போகின்றன .இவைகளுக்கான விடைகளும் நமக்கு பலவாறாக கிடைக்கவே செய்கின்றன .

அந்த விடைகளும் கூட நிலைத்த விடைகளாக இல்லாமல் மாறிக்கொண்டே இருக்கின்றன.

மொத்தத்தில் அனைவருமே ஒரு உண்மையை ஒப்புக் கொள்கின்றனர். அந்த உண்மையை உரித்துப் பார்த்தால் அது நமக்கெல்லாம் மேலே ஒரு சக்தி உள்ளது என்கிற விடையைத்தான் அளிக்கிறது .

அந்த சக்தியை இறைசக்தி என்று கூறுபவர்கள் ஆன்மீகம் சார்ந்தவர்களாகவும், அந்த சக்தியை இயற்கைசக்தி என்று கூறுபவர்கள் விஞ்ஞானம் சார்ந்தவர்களாகவும் உள்ளனர்.

உலகம் தோன்றிய நாளிலிருந்து மனித சமுதாயம் இந்த இரு பிரிவிக்குள் தான் இயங்கி வருகிறது.

ஒன்று இறை சக்தி !அல்லது இயற்கை சக்தி! இந்த இரண்டையும் கடந்து மூன்றாவதாய் ஒரு விஷயமும் நம் தமிழ்ச் சமுதாயத்தில் தோன்றி நம்மிடையே வளைய வருவது தான் ஆச்சரியமான விஷயம்.

அதுதான் சித்த சக்தி! இந்த சித்த சக்தி! ‌ இந்த சக்திக்கு சான்றாக நம் முன்னே நூற்றுக்கணக்கில் சித்த புருஷர்கள் உலவியும் வருகின்றனர்.You may also like...

Leave a Reply