அஷ்டமா சித்து

Advertisements

இரண்டாவது சக்தி மகிமா .இதன் பெயரை போலவே இது மிகவும் மகிமை வாய்ந்தது. ஆற்றல் மிக்கது.

இச்சக்தி கைவரப் பெற்றால் எல்லையில்லாமல் விரிந்து படரும் ஆற்றல் உண்டாகும்.

கண்ண பரமாத்மா விச்வ ரூப தரிசனம் எடுத்து விண்ணுக்கும் மண்ணுக்குமாக நின்றது இந்த மகிமா ஆற்றலால்தான் .

அனுமன் விஸ்வரூபம் எடுத்து இலங்கையை அழித்ததும் இதே சக்தியினால் தான்.

பேருரு எடுக்கும் பேராற்றல் மகிமா சித்தியால் கைகூடும் என்பதை அறிந்தவர்கள் சித்தர்கள்.

விண்ணுக்கும் மண்ணுக்குமாக ஜோதி வடிவாக நின்ற ஈசனே இதனை அறிந்த முதல் சித்தன்.

ஒரு புள்ளி அளவுள்ள விதைதான் ராட்சத வடிவில் மிகப் பெரிய மரமாகின்றது.

நாம் கூட அன்னை வயிற்றில் ஒரு சொட்டு உயிர் துளியாக விழுந்து பின் வளர்ந்து 5 அடி 6அடி என்று உயரங்கள் கொண்டிருக்கிறோம்.

நீண்ட நெடிய காலத்தால் நிகழும் இந்த செயலை யாரும் பெரிய விந்தையாக நினைப்பது இல்லை.

இயற்கை என்று சாதாரணமாகக் கருதி விடுகிறோம்.மஹிமாவின் அடிப்படை ரகசியம் இப்படி நாம் கருதும் இயற்கையான இந்த விஷயத்தில் தான் இருக்கிறது.

ஒன்றை சிறியது என்றும் பெரியது என்றும் எதை வைத்து சொல்கிறோம் .

அதன் உருவத்தை வைத்து தானே?
இந்த உருவம் என்பது எங்கிருந்து வந்தது .சிறிய செடியானது எப்படி மரமானது .வளர்ச்சி என்று ஒரு வார்த்தையில் சொல்லலாம் தான்.

இந்த வளர்ச்சி எப்படிப்பட்டது எங்கிருந்து நமது உடலுக்குத் தேவையான சிசுக்கள் வந்தது.

செடியும் கூட எப்படி மரமாகிப் பெரிதானது. இந்தக் கேள்விக்குள் தான் மகிமா சித்திக்கான விடை ஒளிந்திருக்கிறது.

வெளி !வெட்ட வெளி! காற்று ஓடிப்பிடித்து விளையாடும் வெட்டவெளி .இதில்தான் எத்தனை ரகசியங்கள் .இதில் எல்லாமே இருக்கிறது .

அரிசி இருக்கிறது .பருப்பு இருக்கிறது .தண்ணீர் இருக்கிறது. நமக்கான ரத்தம் முதல் எலும்பு நரம்பு மற்றும் திசுப் பொருள் வரை எல்லாமே இந்த வெளியில்தான் இருக்கிறது நம்ப முடியவில்லையா?

ஆனால் சாதாரணமாக யோசித்தாலே அதுதான் உண்மை என்பது தெரிந்துபோகும் .

.உயிர் இயக்கம் இந்த வெளியிலிருந்துதான் அத்தனையையும் கேட்டு வாங்கி சிறியதைப் பெரிதாக்குகிறது.

இடையில் இருப்பது தான் காலம் இந்த காலத்திடம் தான் நமது வாழ்வு சாவு எல்லாமே உள்ளது.You may also like...

Leave a Reply