பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடா இந்தியா? – ஆர்.கே.

Advertisementsசமீபத்தில் இந்தியாவில் நடந்த சம்பவங்கள் உலகை அதிர வைத்துள்ளது. பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எத்தனை கடுமையான சட்டங்களைக் கொண்டு வந்தாலும், பாலியல் வன்கொடுமைகள் எல்லா இடங்களிலும், நாடு முழுமைக்கும் நடபெறுவது கவலைக்குரியதாக உள்ளது.

சமீபத்தில் ஹைதாராபத்தில் நான்கு இளைஞர்கள் ஒரு இளம் கால் நடை மருத்துவரை வன்புணர்வு செய்து, எரித்து கொலை செய்துள்ளனர். உத்தரபிரதேசத்தில் உனா என்ற இடத்தில் தனது காதலியை நண்பனோடு  கடத்தி பாலியல் குற்றத்தைச் செய்ததோடு மட்டுமல்லாமல், அவளை எரித்துக் கொன்று உள்ளனர்.

உண்மையில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லா நாடாகத்தான் இந்தியா உள்ளது. அங்கொங்ரும், இங்கொங்கும் இச்சம்பங்கள் நடந்தாலும், இது இணையத்தளத்தில் வரும் பாலியல் இணையப்பக்கங்களை இளைஞர் இலகுவாக உபயேகாப்படுத்துவதும், அதோடு ஊரெங்கும் மது ஆராக ஓடும் வதும் தான் காரணம் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.ராகுல்காந்தி உலகிலே பாலியல் வன்கொடுமைக்கு தலைநகரமாக இந்தியா திகழ்கிறது என்று ஆளும் பாஜகவை கடுமையாக சாடியுள்ளார். உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்னும் கடுமையான சட்டங்களை கொண்டு வர அவரசமாக பிரதமரை சந்தித்து பேசினார்.

இதற்கிடையே ஹைதராபாத்தில் என்கெண்டர் என்ற பேரில் குற்றத்தை செய்த நாலு பேரும் போலீசால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.  இது  இந்திய நீதியியல் நடைமுறையைக் கேள்விக்குள்ளாக்கி உள்ளதோடு மட்டுமல்லாமல்,  கேலிக்குரியாதாகவும் மாத்தியுள்ளது.  ஆளும் பாஜக அரசு இதற்கு கடுமையாக கண்காணிப்பு நடைமுறைகளையும், கட்டுப்பாடுகளையும்  கொண்டு வந்தால் தான் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய இயலும்.

பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை கொண்டு வர வேண்டும் என்ற குரல் உச்சமாக கேட்கிறது. அதே நேரம் பாலியல் குற்றம் என்பது  இயற்கை  உந்துதல், அதை சட்டங்களால் எப்படி சீர் செய்ய முடியும்,  நல்ல புரிதலையும், பாலியல் கல்வியையும், ஒழுக்க கோட்பாடுகளையும், நீதிகளையும் சமூகத்தில் விதைக்க தவறியதின் விளைவு தான் இது என்கிறனர் சிலர்.

சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை  நாடே சேர்ந்து கொண்டாடிக் கொண்டிருக்கிறது. இது சரியான நடைமுறையா என்ற கேள்விகளும் எழுகின்றன.  சுட்டுக் கொல்ல வேண்டும் என்றால், எல்லா தண்டனைகளுக்கும் அதைக் கொண்டு வந்தால் தான் குற்றங்கள் குறையும். குறிப்பட்ட செயலுக்கு மரண தண்டனை என்பது மக்களால் நினைவு வைத்துக் கொள்ளும் செயல் அல்ல. கொலைக்கு மரணை தண்டனை உள்ளது என்றாலும். கொலைகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. மக்களின் மனதில் உயர் சிந்தனைகளை,  நல்லோழுக்கங்களை விதைக்காமல் இதில் இருந்து எப்படி நீங்கள் விடுபடுவீர்கள்?  பெண்கள் நாட்டின் பெருமைக்குரியவர்கள். அவர்களை இப்படியான அவமானப்படுத்துவது ஆண்கள் ஒவ்வொருவரும் வெட்கப்பட வேண்டிய செயலே. ஆண்கள், பெண்களுமான இச் சமூகத்தில் ஒரு நல்ல புரிதலையும், சக மனிதர்களை மதித்து நடத்தலும் முக்கியமாக உள்ளது.

கடுமையான சட்டங்கள் தேவை தான். அது மட்டுமே பிரச்னையை  தீர்க்கும் மருந்து அல்ல என்பதையும் அனைவரும் புரிந்து கொண்டு, அதற்கான வழிமுறைகளையும் கண்டு நடைமுறைப்படுத்த வேண்டும்.You may also like...

Leave a Reply