ஓஷோவின் முற்பிறவி (1)

Advertisements

உங்களுடைய முந்தைய பிறவிக்கும், இந்தப் பிறக்கும் உள்ள இடைவெளியைப் பற்றி கொஞ்சம் சொல்ல முடியுமா?

ஓஷோ>தன்னை முழுமையாக அறிந்து கொள்வதற்கு முன், எடுக்கும் பிறவிகள் அனைத்தும் அவர்களது விருப்பப்படி சுதந்திரமாக அமையாது.

அப்படிப்பட்டவர்கள் எடுக்கும் பிறவிகள் அவர்களது எண்ணப்படி ஒருக்காலும் இருக்காது.

முழுமையான பிரக்ஞையில் மற்றும் தன்னை முழுமையாக அறிந்து கொள்வது மூலமாகவே, நீங்கள் உங்கள் பிறவியை உங்கள் விருப்பப்படி தேர்ந்தெடுக்க முடியும்.

இந்த உலகத்தில், காரணமின்றி எதுவும் நடப்பதில்லை. அடுத்த பிறவியை எடுப்பதற்கு இரண்டு காரணங்களில் ஒன்றுதான் இருக்க வேண்டும். அவைகளில் ஒன்று ஆசை, இரண்டாவது கருணை. இதைத் தவிர மூன்றாவது காரணம் என்று எதுவும் இல்லை.

என்னுடைய முற்பிறவி 700 வருடங்களுக்கு முன் நிகழ்ந்தது. மஹாவீரரின் முன் பிறவி அடுத்த பிறவிக்கு சுமார் 250 வருடங்களுக்கு முன்பு ஏற்பட்டது. புத்தருடைய முன் பிறவி, புத்தாவாக அவதரிப்பதற்கு முன்பு சுமார் 78 வருடங்களுக்கு முன்பு நிகழ்ந்தது. புத்தாவைப் பொருத்த வரையில், அவருடைய முற்பிறவிக்கு சாட்சியாக, சில மக்கள் அப்பொழுது வாழ்ந்து கொண்டு இருந்தார்கள். ஏன், மஹாவீரரின் வாழ்வில் கூட, சில பேர்களால், அவருடைய முன்பிறவியில்; தாம் அவரைச் சந்தித்ததை நினைவு கூற முடிந்தது.

You may also like...

Leave a Reply