செக்ஸ் சாமியார்- ஓஷோ

Advertisements

ஆபாசம் என்பது உங்களுக்குள் இருக்க வேண்டும். உங்கள் ஆழ்மனம் எதைப் பார்க்க விரும்புகிறதோ அதுவே உங்களுக்குப் புலப்படுகிறது. கஜுராஹோ வரும் டூரிஸ்டுகள் கூட அந்த சிற்பங்களை அவசர அவசரமாகப் பார்த்து விட்டு வெளியேறி விடுகிறார்கள். சில நிமிடங்கள் நின்று ரசிப்பதைக் கூட அவர்களது அடக்கப்பட்ட காமம் (repressed sex ) அனுமதிப்பதில்லை.

கஜுராஹோவை சுற்றிலும் ஏராளமான ‘தந்த்ரா’ கோயில்கள் இருந்தன. இவற்றையெல்லாம் சுற்றிப்பார்க்கவே சில நாட்கள் தேவைப்படும். அனால் பெரும்பாலானவை இன்று அழிக்கப்பட்டு விட்டன. இப்போது சில கோயில்கள் மட்டுமே எஞ்சி இருக்கின்றன. இந்தியாவில் ஒரு பொற்காலம் இருந்தது. அப்போது காமம் ஒடுக்கப்படவில்லை. அடக்கப்படவில்லை. தவறான கண்ணோட்டத்தில் பார்க்கப்படவில்லை.

‘காம சூத்திரம்’ கூட ரிஷி ஒருவரிடம் இருந்து வந்த நூல். இந்த சிற்பத்தை வடிவமைத்த சிற்பிகளும் இதை நிறைவேற்றிய அரசர்களும் தாந்திரீக வழிபாட்டு முறையில் ஈடுபட்டவர்களாக இருந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. அத்தனை அழகான, கலை நுணுக்கம் மிக்க சிற்பங்கள். ஆண்களும் பெண்களும் பல்வேறு நிலைகளில் கலவி கொள்ளும் சிற்பங்கள். உடைகள் இன்றி. ஒன்றை நீங்கள் கவனிக்க வேண்டும்.

உடைகள் இல்லாமல் இருத்தலும் (naked) அம்மணமாக இருத்தலும் (nude) வேறானவை. அகராதி இவை இரண்டும் ஒரே பொருளுடைய சொற்கள் என்று கூறலாம். ஆனால் அம்மணம் ஆபாசமானது (pornographic). நிர்வாணம் அழகானது.

தொடரும்…

You may also like...

Leave a Reply