செக்ஸ் சாமியார்- ஓஷோ

Advertisementsஇந்த சிற்பங்கள் கலவி நிலையில் இருந்தாலும் அவற்றின் முகங்களைக் கவனியுங்கள். ஒரு முகம் கூட உணர்ச்சி வேகத்தை, சிற்றின்பத்தை வெளிப்படுத்தும்படி வடிவமைக்கப்படவில்லை. ஆழ்ந்த தியான நிலையில் இருப்பது போலவே செதுக்கப்பட்டு உள்ளன. அத்தனை கலவி நிலைகளும் இதில் இடம்பெற்றுள்ளன. ஒன்றே ஒன்று தான் இல்லை. அதுதான் ஆண் மேலேயும் பெண் கீழேயும் படுத்திருக்கும் மிஷனரி நிலை. இந்தப் பரிதாபகரமான பொஷிஷன் மேல்நாட்டு மிஷனரிகள் இந்தியாவுக்கு அறிமுகம் செய்த ஒன்று. கொண்டாட்ட மனப்பான்மை கொண்ட இந்தியர்கள் இந்த ஆணாதிக்கக் கலவி நிலையை அதற்கு முன் அறிந்திருக்கவில்லை.

காந்தி இந்த ஆபாச சிற்பங்களை ஒரேயடியாக மூடிவிட வேண்டும் என்று வலியுறுத்தினார். உங்களால் மகாத்மா என்று அழைக்கப்படுபவர்கள் சதா காமத்தைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இல்லையேல் இத்தனை அழகான சின்னங்களை அழிப்பதற்கு அவசியம் என்ன வந்தது? இவைகளின் மேல் களிமண்ணால் பூசி மெழுகிவிட வேண்டும் என்றார். ஆனால் நல்ல வேளை தாகூர் இதை தடுத்து நிறுத்தி விட்டார். என்ன இருந்தாலும் அவர் ஒரு கவிஞர் அல்லவா? அவர் கலை உணர்ச்சியும் அழகுணர்ச்சியும் நிறைந்தவர். கவிஞர்கள் தங்களை அறியாமலேயே தியான நிலைக்கு மிக அருகில் இருக்கிறார்கள்.

தொடரும்…You may also like...

Leave a Reply