நிறைவாக வாழ்கிறவனை யாராளும் அடிமையாக்கவே முடியாது

Advertisements

முழுமையாக வாழுகிற மனிதன் லட்சியமற்றவன். காரணம் அவன் இப்போதே மகிழ்ச்சியாக இருக்கிறான். இன்னும் அதிகமிருக்கிற சாத்தியத்தை பற்றி அவன் யோசிக்க கூட மாட்டான். நீங்கள் முழுமையாக வாழ்வதால் இன்னும் அதிகம், அதிகம் என்று ஆசைப் படாததால் ஒரு சாதாரண மனிதனின் மன நோய் உங்களுக்கு வராது.

இன்று வரையில் மனித இனம் மனிதனை முழுமையாக வாழ விடாமல் செய்வதைத் தான் நம்பி இருக்கிறது. எல்லா வித தடைகளையும் உருவாக்குகிறது. காரணம் அந்த முழுமையான மனிதன் உலகத்திலுள்ள சுய நல ஆசைகளையெல்லாம் அழித்து விடுவான். முழுமையான மனிதன் தான் சுய நல வாதிகளுக்கு மிகவும் அபாயகரமானவன். வாழ்க்கையை அதன் முழுமையோடு நிறைவாக வாழ்கிற ஒருவனை நீங்கள் அடிமையாக்கவே முடியாது.

முழுமையான மனிதன் வரும் போது சமூகத்தின் அமைப்பே வித்யாசமாக இருக்கும். ஆசையற்று முழுமையான மகிழ்ச்சியோடு ஆனால் புகழ் வாய்ந்த மனிதர்கள் இருக்க மாட்டார்கள். தலை சிறந்த மனிதர்கள் இருப்பதன் காரணமே பல லட்சக்கணக்கான கணக்கான மக்கள் புகழோடு இல்லாமல் இருப்பது தான். பல லட்சம் கௌதம் புத்தர்களும், பல லட்சம் மகா வீரர்களும், பல லட்சம் யேசு கிறிஸ்துகளும் இருந்தால் யார் இந்த மக்களைப் பற்றிக் கவலைப் படப் போகிறார்கள். இந்த சில மக்கள் தலை சிறந்தவர்கள் ஆனதன் காரணமே பல லட்சம் மக்களை இந்த சமூகம் முழுமையாக வாழ விடாதது தான்.

ஒவ்வொரு தருணத்திலும் வாழ்க்கையே ஒரு சொர்க்கம், அந்த வாழ்க்கையே தெய்வீகமாகிறது என்ற எண்ணத்துடன் வாழும் மனிதன் இறந்த சிலைகளை, இறந்த வேத நூல்களை, அழகிய கொள்கைகளை, முட்டாள் தனமான மூட நம்பிக்கைகளை வழி படத் தேவையில்லை. முழு மனிதன் தான் இப்போது இருக்கிற ஸ்தாபனங்களுக்கு மிகப் பெரிய ஆபத்து.

You may also like...

Leave a Reply