வாழ்க்கையே கயிறு மேல் நடப்பது போல் தான்.

Advertisements

நீங்கள் கயிறு மேல் நடப்பவரைப் பார்த்திருக்கிறீர்களா? அவர் தொடர்நது தன்னை சமநிலையிலேயே வைத்திருப்பார். சில சமயம் அவர் இடப்புறம் சாய்வார். இடப்புறம் வலப்புறம் சாய்ந்து அவர் முன்னேறிக் கொண்டே போவார். இடையே தன்னை நிலைப்படுத்திக் கொள்வார். அது தான் அழகு. இடப்புறம், வலப்புறம் இரண்டு எல்லைகளிலும் சாய்வது..அவர் மையத்தில் தன்னை இருத்திக் கொள்வார்.

நீங்கள் இடையில் இருக்க வேண்டுமானால் இரண்டு பக்கமும் மறுபடியும் மறுபடியும் சாய வேண்டும். நீங்கள் ஒன்றையே தேர்ந்தெடுக்கக் கூடாது. தேர்ந்தெடுத்தால் விழுந்து விடுவீர்கள். நீங்கள் உங்கள் தலையை (புத்தி) தேர்ந்தெடுத்தால் அதிக அழுத்தத்திற்கு போவீர்கள். உங்கள் இதயத்தை தேர்ந்தெடுத்தால் பைத்தியமாவீர்கள். தேர்ந்தெடுத்து தான் ஆக வேண்டும் என்றால் பைத்தியமாவதையே தேர்ந்தெடுங்கள். அது அவசியமானது.

ஆனால் நீங்கள் தேர்ந்தெடுக்காமல் இருங்கள் என்பது தான் என்னுடைய யோசனை. தேர்ந்தெடுக்காத விழிப்புணர்வு. அது தான் மூல வார்த்தை. தேர்ந்தெடுக்காமல் இருங்கள். விழிப்போடு இருங்கள். எப்போதாவது ஏதாவது நிலை தவறிப் போவதாக உணர்ந்தால் அந்தப் பக்கம் சாயுங்கள். மறுபடியும் ஒரு சம நிலையை ஞகொண்டு வாருங்கள். இப்படித்தான் ஒருவர் நகர வேண்டும். வாழ்க்கையே கயிறு மேல் நடப்பது போல் தான்.

You may also like...

Leave a Reply