யுவன் சங்கர் ராஜா – ஸ்ரேயா கோஷல் காம்போ(வலிமை படத்துக்காக)

Advertisements

வலிமை படத்துக்கா? மீண்டும் இணைந்த யுவன் சங்கர் ராஜா – ஸ்ரேயா கோஷல் காம்போ.. சென்னை: மீண்டும் யுவன் சங்கர் ராஜா இசையில் பாடியது மகிழ்ச்சி என அவருடன் இருக்கும் புகைப்படத்தை போட்டு வைரலாக்கி வருகிறார் பாடகி ஸ்ரேயா கோஷல். கடந்த ஆண்டு வெளியான சூர்யாவின் என்.ஜி.கே படத்தில் இடம்பெற்ற “அன்பே அன்பே பேரன்பே’ பாடல் மிகப்பெரிய ஹிட் ஆனது. தை மாத ராசி பலன்கள் 2020 : தனுசு மகரம் ராசிக்காரர்களுக்கு முன்னேற்றமான மாதம்

2018ம் ஆண்டே அந்த பாடல் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த நிலையில், இரண்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் யுவனின் இசையில் ஸ்ரேயா கோஷல் புதிய பாடலை பாடியுள்ளது தல ரசிகர்களிடம் ஆர்வத்தை தூண்டியுள்ளது.

7ஜி ரெயின்போ காலனி யுவன் சங்கர் ராஜா இசையில் ஸ்ரேயா கோஷல் 7ஜி ரெயின்போ காலனி படத்திற்காக பாடிய “நினைத்து நினைத்து பார்த்தேன்’ பாடல் மெலோடி ரசிகர்கள் மத்தியில் என்றுமே நீங்காமல் நெஞ்சில் இருக்கும். இரண்டு வருஷம் ஆகிடுச்சு என்.ஜி.கே படத்திற்காக யுவன் சங்கர் ராஜாவும், ஸ்ரேயா கோஷலும் பணிபுரிந்து கிட்டத்தட்ட இரண்டு வருஷங்கள் ஆகிடுச்சு.

அந்த படத்தில் இடம்பெற்ற அன்பே அன்பே பேரன்பே பாடல் 50 மில்லியன்களை கடந்து யூடியூபில் வேற லெவலில் வைரலாகி வருகிறது. மீண்டும் கூட்டணி கோலிவுட், பாலிவுட், டோலிவுட் என படு பிஸியாக சுற்றித்திரியும் ஸ்ரேயா கோஷல் மீண்டும் யுவன் கூட்டணியில் புதிய பாடல் ஒன்றை பாடியுள்ளாராம். யுவனுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு வைரலாக்கி வருகிறார்.

தல அஜித்தின் வலிமையா? ஸ்ரேயா கோஷல் பதிவிட்டுள்ள இந்த ட்வீட்டை பார்த்தவுடன் அஜித் ரசிகர்களுக்கு அப்பாடா கடைசியா ஒரு அப்டேட் கிடைச்சுடுச்சுன்னு ரொம்ப ஆர்வத்துடன் வலிமை? படத்திற்கான பாடலா என கேட்டு வருகின்றனர். ஆனால், எந்த படத்திற்கு என்ற பதிலை இருவரும் கூறவில்லை.

வேற லெவல் வெயிட்டிங் யுவன் சங்கர் ராஜா – ஸ்ரேயா கோஷல் கூட்டணி என்றாலே அழகான மெலோடி கிடைப்பது கன்ஃபார்ம். அவர்கள் காம்போவில் ஏற்கனவே வந்து ஹிட்டான பாடல்களின் தொகுப்பை போட்டு அடுத்த பாடலுக்காக வேற லெவல் வெயிட்டிங்கில் இருக்கிறார் இந்த ரசிகை. அஜித் ரசிகர்கள் ஆர்வம் யுவன் சங்கர் ராஜா இசையில் ஸ்ரேயா கோஷல் பாடியுள்ள புதிய பாடல் நிச்சயம் வலிமை படத்திற்காகத் தான் இருக்கும் என அஜித் ரசிகர்கள் ஆர்வத்துடன் வலிமை குறித்த கருத்துக்களையும் எதிர்பார்ப்புகளையும் தெரிவித்து வருகின்றனர்.

சிம்புவின் மாநாடு படத்திற்கும் யுவன் சங்கர் ராஜா தான் இசையமைத்து வருகிறார் என்பதால், இந்த காம்போ நிச்சயம் சிம்புவின் மாநாடு படத்திற்குத் தான் என சிம்பு ரசிகர்களும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

You may also like...