ஈரானுக்கு பிரிட்டன் கடும் கண்டனம்

Advertisements
britain-updatenews360

ஈரான் நாட்டில், உக்ரைன் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவத்திற்கு, கடும் எதிர்ப்பு தெரிவித்து, நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற காரணத்திற்க்காக, பிரிட்டன் தூதர் கைது செய்யப்பட்டு இருக்கின்றார். பிரிட்டன் நாட்டு தூதர் கைது செய்யப்பட்டதற்கு பிரிட்டன் கடும் கண்டனம் தெரிவித்து இருக்கின்றார்.

ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உக்ரைன் விமானம் கீழே விழுந்து நொறுங்கியது. இதில், பயணம் செய்த 176 பயணிகள் உயிரிழந்து இருக்கின்றனர். உக்ரைன் நாட்டின் விமானத்தை தவறுதலாக சுட்டு வீழ்த்தியதாக ஈரான் அரசு தற்போது ஒப்புக்கொண்டு இருக்கின்றது. . பதற்றம் நிறைந்த ராணுவ பகுதியின் அருகில், உக்ரைன் நாட்டின் விமானம் பறந்த போது, தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஈரான் நாடு விளக்கமளித்து இருக்கின்றது.

ஈரான் நாட்டின் தாக்குதலில், உக்ரைன் நாட்டின் விமானமானது சுட்டு வெவெழ்த்தப்பட்ட காரணத்தால், பறிபோன உக்ரைன் நாட்டின் விமான பயணிகளின் உயிர்களுக்கும், அவர்களது குடும்பங்களுக்கும் மன்னிப்பு மட்டும் ஆறுதல் அளிக்குமா என்றும், வினாக்கள் எழுப்பப்பட்டு, ஈரான் நாட்டிற்கு எதிராகவும் ஈரான் அரசுக்கு எதிராகவும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றது.

ஈரான் நாட்டின் தலைநகரான, டெஹ்ரானில் நடைபெற்ற போராட்டங்களில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் கலந்து கொண்டு, ஈரான் நாட்டின் அரசங்கத்திற்கு எதிராக கோஷங்களும், முழக்கங்களும் எழுப்பி போராடினார்கள்.

ஈரான் நாட்டின், அமிர் கபிர் பல்கலைக்கழகத்தின் அருகில் நடைபெற்ற போராட்டத்தில், பிரிட்டன் தூதர் ராப் மெக்கைர் கலந்து கொண்டு போராடினார். அங்கு வந்த பாதுகாப்பு படையினர், பிரிட்டன் நாட்டின் தூதரை கைது செய்த ஈரான் நாட்டின் அரசாங்கமானது, சில மணி நேரத்தில் விடுவித்தது. ஈரான் நாட்டிற்கு எதிரான போராட்டத்தை தூண்டிய குற்றச்சாட்டுக்களில் தடுப்பு காவலில் கைது செய்து இருப்பதாகவும் ஈரான் நாடு எடுத்து கூறியது. பிரிட்டன் அரசங்கமானது, டெஹ்ரானில் இருக்கும் தூதரை கைது செய்த விஷயத்திற்கு எந்த விளக்கமும் கொடுக்காதது சர்வதேச விதிமுறைகளை மீறிய செயல் என்று, பிரிட்டன் தெரிவித்து இருக்கின்றது.

You may also like...