தமிழகத்தை உயர்த்தும் கடமை ரஜினிக்கும் இருக்கு – கமல்

Advertisements
rajini -kamal - updatenews360

சென்னை விமான நிலையத்தில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது : குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய ஜே.என்.யூ. பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்கப்பட்ட சம்பவம் கவலையை ஏற்படுத்துகிறது. மாணவர்களுக்கே இது நேர்ந்திருப்பது மேலும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சர்வாதிகார போக்கை மாற்ற வேண்டும். சி.ஏ.ஏ. விவகாரத்தில் அ.தி.மு.க. மாற்றி மாற்றி பேசுகிறது.

ஆங்கிலோ-இந்தியன் நியமன சட்டப்பேரவை உறுப்பினர் விவகாரத்தில் அனைவருக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். பல நூற்றாண்டுகளாக இருக்கும் அவர்களும் இந்தியர்கள்தான்.

அதேபோல, தமிழகத்தை அதன் இடத்திற்கு கொண்டு வந்து வைக்க வேண்டிய பொறுப்பு அனைத்து தமிழர்களுக்கும் இடையே உண்டு. உழைப்பு, வியர்வை மற்றும் செல்வம் உள்ளிட்டவற்றை முதலீடாக்க வேண்டும். இந்தப் பொறுப்பு ரஜினிக்கும் உண்டு, எனக் கூறினார்.

You may also like...