முருகதாஸை பற்றி மகேஷ்பாபு

Advertisements
ARM - updatenews360

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்த ‘ஸ்பைடர்’ படம் தோல்வியடைந்தது குறித்து முதன்முறையாக மனம் திறந்து பேசியுள்ளார் மகேஷ் பாபு.

” சரிலேரு நீக்கெவரு ” படத்தின் Promotion – க்காக மகேஷ்பாபு அளித்த பேட்டியில், ‘ஸ்பைடர்’ தோல்வி தொடர்பாக மகேஷ் பாபு கூறுகையில், “முருகதாஸுடன் பணிபுரிந்த காலம் நன்றாக இருந்தது. இன்றும் இந்தியாவில் இருக்கும் சிறந்த இயக்குநர்களில் அவர் ஒருவர். அந்தப் படத்தின் பிரச்சினை என்னவென்றால், சில பல அலட்சிய பிரச்சினைகள் Set – இல் நடந்தது. தெலுங்கில் நான் ஒரு நட்சத்திரம். தமிழ் ரசிகர்களைப் பொறுத்தவரை நான் புதியவன்.

Mahesh Babu-Updatenews360

Mass – ஆன விஷயங்களை முருகதாஸ் குறைத்ததில் தெலுங்கு ரசிகர்கள் வருத்தமடைந்தனர். ஆனால் தமிழ் ரசிகர்களுக்குப் பிடித்தது. மேலும், ஒரே நேரத்தில் இரண்டு மொழிகளில் படம் எடுக்கும்போது, சில விஷயங்களும், படைப்பாற்றலும் முருகதாஸை பாதித்தது. ஏனென்றால் ஒவ்வொரு காட்சியையும் இரண்டும் முறை எடுக்க வேண்டும். அதனால் அந்த படம் இரண்டிற்கும் நடுவில் சிக்கி தவித்து தோல்வியை தழுவியது.” என்று கூறியுள்ளார்.

You may also like...