92-வது ஆஸ்கார் விருது விழா

Advertisements
oscar award-updatenews360

லாஸ் ஏஞ்சல்ஸ்: சர்வதேச அளவில் திரையுலகின் கவுரவமிக்க விருதாக கருதப்படும் ஆஸ்கார் விருது விழா தொகுப்பாளர் இன்றி நடைபெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

திரையுலகின் கவுரவமிக்க விருதாக கருதப்படும் ஆஸ்கார் எனப்படும் அகாடமி விருது. 24 பிரிவுகளில் கதை, வசனம், இயக்கம், இசை, நடிப்பு என இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. உலகில் உள்ள அனைத்து மொழி படங்களும் இந்த விருதை பெறுவதற்காக போட்டியிடுகின்றது.

யாரெல்லாம் இந்த விருது வாங்குகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பை போல், ரசிகர்கள் மத்தியில் ஆஸ்கார் விழாவை தொகுத்து வழங்குவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகம் இடம் பெறும்.

இந்த நிலையில் அடுத்த மாதம் 10-ந் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 92-வது ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது. கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் தொகுப்பாளர் இன்றி ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த விழாவில் புதுவகையான கலைநிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு ஆச்சரியங்கள் இருக்கும் என ‘ஏபிசி’ நிறுவனம் தெரிவித்துள்ளது.

You may also like...