நிர்பயா வழக்கு – தூக்கிற்கு ஒத்திகை

Advertisements

நிர்பயா கூட்டு பலாத்காரம் மற்றும் கொலைவழக்கில் கைதான முகேஷ் குமார், வினய் சர்மா, அக்ஷய் குமார், மற்றும் பவன் குப்தா ஆகியோருக்கு ஜனவரி மாதம் 22 ஆம் தேதி சுப்ரீம் நீதிமன்றம், திஹார் சிறைச்சாலையில் தூக்கிலிட ஆணையிட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் “இறுதியாக நீதி கிடைத்துள்ளது ” என்று தெரிவித்துள்ளனர்.


நேற்று, திஹார் சிறைச்சாலையில் முதன்முறையாக தூக்கிற்கு ஒத்திகைப் பார்க்கப்பட்டது. முகேஷ் குமார் எடையில், மணலால் சணல் கட்டி ஒரு பொம்மைப் போல் அமைத்து அதனை தூக்குக்கயிற்றில் மாட்டித் தொங்கவிட்டு கயிற்றின் தரத்தை உறுதிப்படுத்திக்கொண்டனர். வரும் 22 ஆம் தேதி காலை ஏழு மணிக்குத் தூக்கிடவுள்ளனர்.


2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 16 ஆம் தேதியன்று ஒரு 23 வயதான பாராமெடிக் மாணவி டெல்லிப் புறநகர்ப் பகுதியில் ஆறுப் பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். சிங்கப்பூர் நாட்டு மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுக்கொண்டிருந்தபோது டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

You may also like...