நெரிசல் நகரமாக மாறிய சென்னை

Advertisements

சென்னை: பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு பொதுமக்கள் செல்ல தொடங்கி இருப்பதால் சென்னை போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கிறது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து பிற மாவட்டங்களுக்கு செல்பவர்களின் வசதிக்காக கோயம்பேடு, மாதவரம் உள்ளிட்ட பகுதிகளில் அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பயணிகள் குவிந்து வருவதால்  கூட்டம் அலைமோதியது.

பொங்கல் சிறப்பு பேருந்துகள் 10ம் தேதியில் இருந்து இயக்கப்பட்டு வரும் நிலையில், இதுவரை 2 லட்சத்து 81 ஆயிரத்து 800 பயணிகள் அரசுப் பேருந்துகளில் பயணித்துள்ளதாக போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.

சொந்த ஊர் செல்வதற்காக 1 லட்சத்து 75 ஆயிரத்து 500 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர், முன்பதிவு மூலம் மட்டும் 9 கோடியே 12 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது என்று போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களிலும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. கூட்டம் நிரம்பி வழிவதால் பயணிகள் கடும் சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

பயணிகளின் வசதிக்காக சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ரயில் நிலையங்களில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

You may also like...