காதலுக்கு மரியாதை – ராஜ மரியாதை துறக்கும் ஹாரி

Advertisements
HARRY-UPDATENEWS360

பிரிட்டிஷ் இளவரசர் சார்லஸின் இளைய மகன் ஹாரி. இவர் சென்ற 2018-ம் ஆண்டு மே மாதம் 19-ம் தேதியன்று, அமெரிக்காவின் புகழ் பெற்ற நடிகையான, மேகன் மெர்கலை காதல் திருமணம் புரிந்தார். வெள்ளையினத் தந்தை மற்றும் கருப்பினத் தாய்க்கும் பிறந்தவர தான் மேகன் மெர்கல். அவருக்கு உரிய மரியாதையை, பிரிட்டன் அரச குடும்பத்தினர் யாரும் தரவில்லை என்றும் தகவல்கள் வெளிவருகின்றது.

பிரிட்டன் அரச குடும்ப உறுப்பினர் பொறுப்பலிருந்து விலக இருப்பதாக இளவரசர் ஹாரியும், அவரின் மனைவியான, மேகன் மெர்கலும் சில நாட்களுக்கு முன் அறிவித்திருந்தனர். அதோடு மட்டுமல்லாமல், பிரிட்டன் நாட்டின் அரச குடும்ப, பரம்பரை சொத்து எதுவும் வேண்டாம் என்றும், சொந்தமாக உழைத்து முன்னேற இருப்பதாகவும் இருவரும் உறுதிபடதத் தெரிவித்து இருக்கின்றனர்.

இளவரசர் ஹாரி மற்றும் அவரின் மனைவியான மெக்கலின் தீர்மானம் பற்றி, இங்கிலாந்து ராணி ஆலோசனை நடத்தியதன் மூலமாக, ஹாரி மற்றும் மெக்கலின் தீர்மானத்திற்கு ராணி எலிசபெத் ஒப்புதல் வழங்கி இருப்பதாகவும், இங்கிலாந்து நாட்டு அரச குடும்பம் அவர்களின், தீர்மானத்திற்கு மனப்பூர்வமான ஆதரவு அளிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டு இருக்கினறது.

இந்த அரசு குடும்ப அதிர்வுகளை மத்தியில், அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வருகின்ற, பர்கர் கிங் நிறுவனமானது, உலகம் முழுவதிலும், 17,796 கிளைகளை கொண்டு செயல்பட்டு வருகின்ற, பிரபலமான துரித உணவு நிறுவனமாகும்.

பர்கர் கிங் நிறுவனமானது, தங்களுடைய ராஜ்ஜியத்தில் வேலை வாய்ப்பு எப்போதும் உண்டு என்று குறிப்பிட்டு இருப்பதன் மூலமாக,இங்கிலாந்து அரச குடும்பத்தின் வாரிசான ஹாரிக்கு, வேலை வாய்ப்புத் தருவதற்கு, பர்கர் கிங் தயார் என்று அறிவிப்பு வெளியிட்டு இருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கின்றது.

You may also like...