ரஜினியை இடித்துரைத்த உதயநிதி

Advertisements

சென்னை: கால்நூற்றாண்டாக கால்பிடித்து காலம்கடத்தி ‘தலைசுத்திருச்சு’ என நிற்கும் காரியக்காரர் என்று ரஜினியின் துக்ளக் பேச்சுக்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.

துக்ளக் இதழின் 50வது ஆண்டு விழா சென்னையில்  நேற்று நடைபெற்றது. விழாவில், குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடு கலந்து கொண்டார். துக்ளக் 50வது ஆண்டு விழா மலரை அவர் வெளியிட, முதல் பிரதியை நடிகர் ரஜினிகாந்த் பெற்று கொண்டார்.

நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளர்களாக பாஜக மூத்த தலைவர்கள் பொன். ராதாகிருஷ்ணன், இல.கணேசன், தமாகா தலைவர் ஜி.கே வாசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.  நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், மக்களுக்கு சேவை செய்வது என்பது தந்தைக்குரிய பதவி.

அந்த மாபெரும் சேவையை சோவை தொடர்ந்து சிறப்பாக கொண்டு செல்கிறார் குருமூர்த்தி. சோ ஒரு மிகச்சிறந்த அறிவாளி. அதை நிரூபிக்க தேர்ந்தெடுத்தது பத்திரிக்கை துறை.

அதில் அவர் எடுத்த ஆயுதம் துக்ளக். சோ ராமசாமியையும், துக்ளக்கையும் பெரிய அளவில் பிரபலப்படுத்தியவர்களில் முன்னாள் முதல்வர் கருணாநிதி, பக்தவத்சலம் ஆகிய இருவருக்கும் முக்கிய பங்கு உண்டு.

முரசொலி வைத்திருந்தால் திமுக காரன் என்பார்கள். துக்ளக் வைத்து இருந்தால் அறிவாளி என்பார்கள். தற்போதைய சூழலில் காலம், அரசியல், சமுதாயம் மிகவும் கெட்டுப்போயுள்ளது என்று பல விஷயங்களை பேசினார்.

ரஜினிகாந்தின் இந்த் பேச்சு திமுகவினருக்கு அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது. இந் நிலையில் ரஜினியின் பேச்சை சுட்டிகாட்டி உதயநிதி ஸ்டாலின்  தனது ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது: முதல்வர்னா முத்தமிழறிஞர், தலைவன்னா புரட்சித் தலைவன், தைரியலெட்சுமினா அம்மா-கால்நூற்றாண்டாக கால் பிடித்து காலம்கடத்தி ‘தலைசுத்திருச்சு’என நிற்கும் காரியக்காரருக்கு மத்தியில், முரசொலியை கையிலேந்தி, பகுத்தறியும் சுயமரியாதைக்காரனே திமுகக்காரன். நான் திமுகக்காரன். பொங்கல் வாழ்த்துகள் என கூறி உள்ளார்.

பொதுவாக ஸ்டாலின் உள்ளிட்ட திமுக தலைவர்கள் பொங்கல் வாழ்த்து கூறமாட்டார்கள். தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் என்றே கூறுவர். ஆனால் அதை பற்றி அறியாமல் அடுத்த இளம்தலைவர் இவர் தான் என்று திமுகவினர் கொண்டாடி வரும் உதயநிதி ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து கூறியதை நெட்டிசன்கள் ஏகத்துக்கும் கலாய்த்து வருகின்றனர்.

You may also like...