சிவகார்த்திகேயன் அட்வைஸ்

Advertisements

சென்னை : இன்றைய உணவுப்பழக்கத்திற்கு கட்டாயம் உடற்பயிற்சி அவசியம் என சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன் சென்னையில் நடைப்பெற்ற ஒரு தனியார் உடற்பயிற்சி கூட விழாவில் கலந்து கொண்டார். அந்த விழாவில் அவருக்கு சிறப்பான வரவேற்பு வழங்கபட்டது. அதன்பின் கேக் வெட்டி உடற்பயிற்சி கூடத்தை திறந்து வைத்தார் சிவாகார்த்திகேயன்.

அப்போது பத்திரிக்கையாளர்களிடம் பேசிய சிவகார்த்திகேயன் முன்னெல்லாம் ஜிம் போனாலே அர்னால்டு ஆகிவிடுவேன் என்று நினைத்து இருந்தேன். அதுமட்டுமின்றி அர்னால்டு போல் உள்ளவர்களுக்கு மட்டும் தான் ஜிம் என்றும் நினைத்து இருந்தேன். அதன்பின் தான் தெரிந்தது ஜிம் என்பது எல்லோருக்குமானது. இன்றைய சூழ்நிலையில் எடுக்கப்படும் உணவுப் பழக்கங்கள் மற்றும் மனவலிக்கு கட்டாயம் ஜிம் அவசியமாகும் என்றும் தெரிவித்தார். நான் உடற்பயிற்சியில் மிகவும் சோம்பேறி ஜிம் சேர்ந்த மறுநாளே நின்று விடுவேன் என்று நகைச்சுவையாக கூறினார். தொடர்ந்து பேசிய அவர், அடிப்படையை ஒழுங்காக கற்றுக்கொண்டு, ஜிம் சென்று கொண்டிருக்கிறேன் என கூறினார். மேலும், உடற்பயிற்சியாளர்கள் மருத்துவர்களுக்கு இணையானவர்கள் ஆயுளை நீட்டிக்கும் உடற்பயிற்சியை அவர்கள் சிறந்த முறையில் கற்று தந்து பலரின் வாழ்வை மாற்றி இருக்கின்றனர் என்று சிவகார்த்திகேயன் பாராட்டு தெரிவித்தார் .

தனது உடற்பயிற்சியாளர் பற்றி பேசிய சிவகார்த்திகேயன். என்னுடைய பயிற்சியாளர் எப்போதும் கூறுவது உடற்பயிற்சி என்பது உடலை கட்டுகோப்பாக வைக்க வெறும் 30 சதவீதம் தான் உதவுகிறது, நாம் தூங்கும் அளவும் மற்றும் உணவுப்பழக்கம் தான் நம் உடலை தீர்மானிக்கிறது என்று கூறுவார். அதை நாம் கட்டாயம் பின் பற்ற வேண்டும் என்றார். சிவகார்த்திகேயன் இன்று நேற்று நாளை இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார். அதற்கடுத்து கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் டாக்டர் படத்தில் நடித்து வருகிறார்.

You may also like...