ராமர் கோவில் கட்டும் பணி ஏப்ரல் மாதம் தொடங்கும்

Advertisements

ராமர் கோவில் கட்டும் பணி ஏப்ரல் மாதம் தொடங்கும்அறக்கட்டளை உறுப்பினர் தகவல்


அயோத்தி வழக்கில் கடந்த நவம்பர் 9-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு அரசியல் சட்ட அமர்வு தீர்ப்பு அளித்தது. ராமர் கோவில் கட்டுமான பணிகளை மேற்பார்வையிட 3 மாதத்துக்குள் ஒரு அறக்கட்டளை அமைக்குமாறு உத்தரவிட்டது.

அதன்படி, ‘ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா டிரஸ்ட்’ என்ற பெயரில் அறக்கட்டளை அமைக்கப்படுவதாக பிரதமர் மோடி நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் அறிவித்தார். அதில், 15 உறுப்பினர்கள் இடம்பெறுவார்கள் என்ற தகவலும் வெளியானது.
அறக்கட்டளையின் 15 உறுப்பினர்களில் சுவாமி கோவிந்த் தேவகிரி மகராஜ் என்ற ஆன்மிகவாதியும் ஒருவர். அவர் நேற்று மராட்டிய மாநிலம் புனேவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-


ராமர் கோவில் கட்ட அறக்கட்டளை அமைத்த மோடி அரசின் முடிவை நான் வரவேற்கிறேன்.
2 வருடத்தில் முடியும்
ராமர் கோவில் கட்டுமான பணி, ஏப்ரல் மாதத்தில் ராம நவமியிலோ (ஏப்ரல் 2) அல்லது அட்சய திருதியையிலோ (ஏப்ரல் 26) தொடங்கப்படும். அறக்கட்டளையின் முதலாவது கூட்டத்தில், சரியான தேதி முடிவு செய்யப்படும். 2 வருட காலத்தில் கட்டுமான பணி முடிவடையும்.


ராமர் கோவில் கட்டுவதை பெரும்பாலானோர் விரும்புகின்றனர். இந்த கோவில், ராமருக்கு நினைவு சின்னமாக மட்டுமின்றி நாட்டின் அடையாளமாகவும் இருக்கும்.
இந்த நேரத்தில், ராம ஜென்மபூமி இயக்கத்துக்காக பாடுபட்ட விசுவ இந்து பரிஷத்தின் மறைந்த தலைவர் அசோக் சிங்காலையும், கரசேவகர்களையும் நினைவு கூர்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

You may also like...