சீன மருத்துவமனைகளில் நர்சுகளுக்கு பதிலாக ரோபோக்கள்

Advertisements

வேகமாக பரவும் கொரோனா வைரஸ்: சீன மருத்துவமனைகளில் நர்சுகளுக்கு பதிலாக ரோபோக்கள்


சீனாவில் கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவி வருகிறது. வைரஸ் பாதிப்பு மற்றும் உயிரிழப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை அங்கு 811 பேர் பலியாகியுள்ளனர். 37 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். வைரஸ் தாக்குதலால் மருத்துவமனைகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது.

பல்வேறு மருத்துவமனைகளில் நோயாளிகளை அனுமதிக்க இடம் இல்லாத சூழல் நிலவுகிறது. ஏற்கனவே 1,000 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையை உகான் நகரில் 10 நாட்களுக்குள் சீன அரசு கட்டி முடித்து உள்ளது. மேலும், மருத்துவமனைகளை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது.


மருத்துவமனைகளில் டாக்டர்கள், நர்சுகள் மற்றும் ஊழியர்கள் விடுப்பின்றி பணியாற்றி வருகிறார்கள். கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில், குடும்பத்தினரை பிரிந்து பணியாற்றும் அவர்கள் வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் நிலை உள்ளது.
இதனால் அவர்களை வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாப்பதற்காக மருத்துவமனைகளில் நர்சுகளுக்கு பதில் ரோபோக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. நோயாளிகளுக்கு மருந்து, மாத்திரை, உணவுகளை நர்சுகள் வழங்குவதற்கு பதிலாக ரோபோக்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த நடவடிக்கையை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

You may also like...