கெஜ்ரிவாலின் பதவியேற்பு விழாவில் சிறப்பு விருந்தினர்-குழந்தை

Advertisements

 Feb 14, 2020 0278

அரவிந்த் கெஜ்ரிவாலைப் போல உடையணிந்து இணையத்தில் வைரல் ஆன குழந்தைக்கு, அவர் முதலமைச்சராக  பதவி ஏற்கும் விழாவிற்கு சிறப்பு விருந்தினராக பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

image

டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டபோது, ஆம் ஆத்மி கட்சிக்காரர் ஒருவரின் குழந்தையான ஆவ்யன் தோமர் என்ற 1 வயது குழந்தை, அச்சு அசலாக கெஜ்ரிவால் போல உடையணிந்து அக்கட்சி அலுவலகம் முன்பாக உலா வந்தது.

image

பலரது கவனத்தையும் ஈர்த்த அக்குழந்தையின் புகைப்படம் இணையத்திலும் வைரல் ஆனது. இந்நிலையில் வருகிற 16ஆம் தேதி கெஜ்ரிவால் முதலமைச்சராக பதவியேற்கவுள்ள நிகழ்வில் கலந்துகொள்ள அக்குழந்தைக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

You may also like...