ஜப்பான் கப்பலில்-138 இந்தியர்கள்-கொரோனாகொடூரம்

Advertisements

டோக்கியோ: ஜப்பானில் இருக்கும் கொரோனா வைரஸ் தாக்கிய கப்பலில் வைரஸ் காரணமாக 218 பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

ஜப்பானில் இருக்கும் கொரோனா கப்பலுக்கு இன்னும் விடிவு காலம் பிறக்கவில்லை. ஜப்பான் அரசு கொரோனா தாக்கப்பட்ட கப்பலை உள்ளே அனுமதிப்பதா வேண்டாமா என்று குழம்பிப் போய் இருக்கிறது. கப்பல் ஒன்று கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக நடுக்கடலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

கார்னிவல் ஜப்பான் நிறுவனத்திற்கு சொந்தமான கப்பல் ஆகும் இது. முதலில் ஒருவருக்குதான் கொரோனா வைரஸ் தாக்குதல் இருந்தது.

எத்தனை பேர்

எத்தனை பேர்

இந்த கப்பலில் 3500 பேர் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. டயமண்ட் பிரின்சஸ் என்பது இந்த கப்பலின் பெயர். ஜப்பானில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் கப்பலில் உள்ள மொத்தம் 218 பேருக்கு வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. கப்பலுக்கு உள்ளே இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அங்கு முதலில் ஒருவருக்கு மட்டுமே இந்த வைரஸ் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

வைரஸ் ஏற்பட்டது

வைரஸ் ஏற்பட்டது

அதே சமயம் அங்கு இருக்கும் இன்னும் சிலருக்கும் வைரஸ் இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. அங்கு 3500 பேரில் 713 பேருக்கு மட்டுமே வைரஸ் சோதனை செய்யப்பட்டுள்ளது. மீதம் இருக்கும் 2800 பேருக்கு இன்னும் சோதனை செய்யப்படவில்லை. இவர்களில் யாருக்கு எல்லாம் இந்த வைரஸ் தாக்குதல் இருக்கும் என்று உறுதியாக சொல்லப்படவில்லை .

இந்தியர்கள்

இந்தியர்கள்

இந்த கப்பலில் மொத்தம் 138 இந்தியர்கள் இருக்கிறார்கள். இவர்களில் இரண்டு பேருக்கு வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. அதேபோல் மேலும் இந்தியர்கள் 8 பேருக்கு இந்த நோய் தாக்குதல் ஏற்பட்டு இருக்கலாம் என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கிறது. இந்த கப்பலில் அதேபோல் மொத்தம் 400 அமெரிக்கர்கள் இருக்கிறார்கள். இவர்களில் 13 பேருக்கு நோய் தாக்குதல் ஏற்பட்டு இருப்பதாக கூறுகிறார்கள்.

மோசம்

மோசம்

இந்த கப்பலை ஜப்பானின் 8 துறைமுகங்கள் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது. எங்கள் எல்லைக்குள் இந்த கப்பலை அனுமதிக்க மாட்டோம் என்று அதிகாரிகள் உறுதியாக கூறிவிட்டனர். அந்த கப்பலை ஜப்பான் நடத்தும் விதம் உலக நாடுகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ஜப்பான் போன்ற நாடு இப்படி செய்யும் என்று நினைக்கவில்லை என்றுள்ளார். அதே சமயம் ஜப்பானில் நேற்று கொரோனா வைரஸ் காரணமாக முதல் நபர் பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like...