அஜித் பறக்கவிட்ட குட்டி ஹெலிகாப்டர்!

Advertisements

பொங்கல் பண்டிகையின் போது மக்கள் பலரும் மைதானத்தில் மஞ்சுவிரட்டை ரசித்துக்கொண்டிருந்த வேளையில், நடிகர் அஜித் பெரிய மைதானம் ஒன்றில் ஆளில்லாத குட்டி ஹெலிகாப்டர் டிரோனை இயக்கியிருக்கிறார். அந்த புகைப்படங்கள் தற்பொழுது வலைத்தளத்தில் வெளியாகி வைரல் ஆகிவருகிறது.

வலிமை படத்தின் படப்பிடிப்பு நடிகர் அஜித் இயக்குநர் எச். வினோத்துடன் இணைந்து வலிமை படத்தில் நடித்து வருகிறார். முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் சமீபத்தில் நடைபெற்று முடிவடைந்துள்ளது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்காகச் சென்னையில் உள்ள கோகுலம் ஸ்டுடியோவில் செட் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. காஞ்சிபுரம் காவல்நிலைய அதிகாரிகளுடன் அஜித் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்குப் படக்குழுவினர் தயாராகிவரும் நிலையில், நடிகர் அஜித் காஞ்சிபுரம் காவல்நிலைய அதிகாரிகளுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் போன வாரத்தில் சமூகவலைத்தளம் முழுதும் பரவி வைரல் ஆகியது.

வலிமை படத்தில் காவல்துறை அதிகாரியாக நடிகர் அஜித் நடித்திருக்கிறார் என்று இந்த படத்துடன் பகிரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. புதிய தோற்றத்தில் அஜித் போனி கபூர் தயாரித்து வரும் இந்த படத்திற்கு யுவன் சங்கர்ராஜா இசை அமைக்கிறார். இந்த படத்திற்காக நடிகர் அஜித் தனது உடல் எடையைக் குறைத்து, சால்ட் அண்ட் பெப்பர் லுக்கை மாற்றி இளமையாகத் தோற்றமளித்து தனது ரசிகர்களுக்கு புதிய உற்சாகத்தை அளித்துள்ளார். வைரல் ஆகும் புகைப்படம் பொங்கல் பண்டிகையின் போது நடிகர் அஜித் பெரிய மைதானம் ஒன்றில் ஆளில்லா குட்டி ஹெலிகாப்டர் டிரோனை இயக்கி சோதனை செய்துள்ளார். நடிகர் அஜித் ஹெலிகாப்டர் டிரோனை இயக்கும் காட்சிகள் படம்பிடிக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்படங்களை அஜித் ரசிகர்கள் தீவிரமாக ஷேர் செய்து வருகின்றனர். தற்பொழுது சமூக வலைத்தளம் முழுதும் இந்த புகைப்படம் வைரல் ஆகிவருகிறது.

You may also like...