தமிழக பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்

Advertisements
பட்ஜெட்

பட்ஜெட்

தமிழக அரசின் 2020-21ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை துணை முதலமைச்சரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.Yesterday at 12 PM

தேர்தல் பீதியில் தயாரிக்கப்பட்ட பட்ஜெட்!

தமிழக பட்ஜெட் குறித்து பேசிய தினகரன், “தமிழகத்தில் நிதிநிலை சிக்கலாக இருப்பதாக நிதிநிலை அறிக்கையிலே சொல்லப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க தேர்தல் பீதியில் தயாரிக்கப்பட்ட பட்ஜெட்டாக இது உள்ளது.

டெல்டா பகுதிகளைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் பகுதிகளாக அறிவித்துள்ளார்கள். ஆனால், அதற்கு அடுத்தகட்ட திட்டப் பணிகள் குறித்து பட்ஜெட்டில் எதுவும் இடம் பெறவில்லை” என்றார்.Yesterday at 11 AM

கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம்!

ராமநாதபுரம், விழுப்புரத்தில் கடல் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. ரூ.3,041 கோடி மதிப்பில் இந்தத் திட்டங்கள் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரு சுத்திகரிப்பு நிலையங்களும் 60 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்பு திறன் கொண்டதாக இருக்கும்!

Yesterday at 11 AM

கோயில் நிலங்கள் மீட்பு! 

  • 7,233 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டு கோயில்கள் பெயரிலேயே பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளது என நிதியமைச்சர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
  • 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்துக்கு 966 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • கால்நடைத்துறைக்கு ரூ.199 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • தேனி, திண்டுக்கல், சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் வேளாண் பதப்படுத்தும் மண்டலங்கள் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
  • விரிவான விபத்து மற்றும் ஆயுள் காப்பீடுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை உயர்த்தப்பட்டுள்ளது.
  • சிறப்பு போக்ஸோ நீதிமன்றங்கள் உட்பட நீதிமன்றக் கட்டடங்களுக்காக ரூ.1,317 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • விவசாயிகளின் சந்தேகங்களைத் தீர்க்க உழவர்- அலுவலர் தொடர்பு திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
  • உழவர் பாதுகாப்புத் திட்டத்துக்காக ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று நெல்லை மாவட்டத்தில் கங்கைகொண்டானில், மெகா உணவு பூங்கா அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும்!

  • 2018-19 -ம் நிதியாண்டில் தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சி 8.17 சதவிகிதமாக இருந்தது. 2019-20 -ம் நிதியாண்டில் மாநிலத்தின் வளர்ச்சி 7.27 சதவிகிதமாக இருந்தது.
  • இந்தியப் பொருளாதார வளர்ச்சி விகிதத்தைவிட, கடந்த ஆண்டு மாநிலத்தின் வளர்ச்சி விகிதம் 5 சதவிகிதம் அதிகமாக இருந்தது. வரும் நிதியாண்டிலும் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக பட்ஜெட் உரையில் தெரிவித்தார் நிதியமைச்சர் பன்னீர் செலவம்!

You may also like...