குணமடைந்து வீடு திரும்பிய வர்களுக்கு மீண்டும் கொரோனா

Advertisements

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 776 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.  

இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,967ஆக அதிகரித்துள்ளது. இதில் 25 பேர் ஏற்கனவே கொரோனாவல் பாதிக்கப்பட்டு வீடு திரும்பியவர்கள் ஆவர். அவர்களுக்கு இரண்டாவது முறையாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார். 

சென்னையில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் இன்று மட்டும் 567 கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

You may also like...