கொரோனாவுக்கு தடுப்பூசியை கண்டுபிடித்து அதை உலகின் பொது சொத்தாக்குவோம்- சீனா

Advertisements
ஜீ ஜின்பிங்

ஜீ ஜின்பிங்

சீனாவில் உருவாகி தற்போது உலகை மிரட்டிக் கொண்டிருக்கும்  கொரோனா  வைரஸ் நோய் தொற்றுக்கு கோவிட்-19 என பெயரிடப்பட்டுள்ளது. இந்த தொற்றானது கொரோனா வைரஸால் ஏற்படுகிறது.

இதற்கு Severe acute respiratory syndrome (SARS) கொரோனா வைரஸ் 2 அல்லது Sars-CoV-2 என்று விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர். சீனாவில் உருவான சார்ஸ் கிருமிதான் மரபனு மாற்றமாகி கொரோனா வைரஸாக மாறியுள்ளது என சில பல்கழைக் கழகத்தின் வைரஸ் ஆராய்ச்சி துறையினர் தெரிவித்துள்ளனர்.

சீனாவின் வுஹான் நகரம்தான் இந்த கொரோனா வைரஸ் தாக்குதலின் மையப்புள்ளியாகும். அங்கிருக்கும் மிகப்பெரிய இறைச்சி மற்றும் கடல் உணவுகள் கொண்ட சந்தைபகுதிதான் இந்த கொரோனா வைரஸ் தொற்றுக்கு காரணம் என கண்டறிந்தனர்.

சீனர்களின் உணவுப் பழக்கம்தான் கொரோனா வைரஸ் தொற்றுக்கு காரணம் எனவும், இது மனிதர்களால் உருவாக்கப்பட்ட வைரஸ் எனவும் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. ஆனால், இவை எதற்குமே அதிகாரப்பூர்வ சான்றுகள் எதுவும் இல்லை.

இருந்த போதிலும், இந்த விஷயத்தில் சீனாவை பகிரங்கமாக அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது. உலக சுகாதார நிறுவனம் சீனாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாகவும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குற்றம் சாட்டி வருகிறார்.

கொரோனா வைரஸால் சர்வதேச அளவில் 47 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியுள்ளது. எனினும், இந்த வைரஸ் தொற்றுக்கு இதுவரை தடுப்பூசி  கண்டறியப்படவில்லை.

கை கழுவுதல், மாஸ்க் அணிந்து கொள்ளுதல், சரீர இடைவெளி, பொது முடக்கம் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மட்டுமே உலகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. கொள்ளை நோயான கொரோனாவுக்கு தடுப்பு மருந்தை கண்டறிவதில் உலக மருத்துவர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், உலக சுகாதார சபை கூட்டத்தில் கானொளி காட்சி மூலம் பேசிய  ஜின்பிங், கொரோனா பிரச்சினை முற்றிலுமாக முடிந்த பிறகு அது தொடர்பான உலகளாவிய விரிவான மதிப்பீட்டுக்கு  சீனா முழு ஒத்துழைப்பு தரும் என்றார். அத்துடன், கொரோனாவுக்கு மருந்து கண்டறிவதில் ஈடுபட்டுள்ளது. அதற்கான தடுப்பூசியை சீனா கண்டுபிடித்ததும் அதை உலகின் பொது சொத்தாக்குவோம். இதன் மூலம், வளரும் நாடுகளில் கொரோனா தடுப்பூசி எளிமையாகவும், மலிவாகவும் கிடைப்பதற்கான சீனாவின் பங்களிப்பு உறுதி செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்

You may also like...