கொரோனா வைரஸின் தன்மை மாறி உள்ளது-சீனா

Advertisements
China’s President Xi Jinping swears an oath after being elected for a second term during the fifth plenary session of the first session of the 13th National People’s Congress (NPC) at the Great Hall of the People in Beijing on March 17, 2018. China’s rubber-stamp parliament unanimously handed President Xi Jinping a second term on March 17 and elevated his right-hand man to the vice presidency, giving him a strong ally to consolidate power and handle US trade threats. / AFP PHOTO / Greg Baker

சீனாவில் கொரோனா வைரஸின் தன்மை மாறியிருப்பதாக அந்நாட்டின் மூத்த மருத்துவர் ஒருவர் கூறியிருக்கிறார்.

கொரோனா வைரஸ்  சீனாவின் மத்தியப் பகுதியில் உள்ள ஹூபெய் மாகாணத்தில் வுகான் நகரிலிருந்து பரவத் தொடங்கியது. தற்போது அந்நாட்டில் இந்த வைரஸின் தாக்கம் குறைந்துள்ளதால் ஊரடங்குக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.

இருப்பினும் வடகிழக்கு மாகாணங்களில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளானவர்கள் எண்ணிக்கை கூடிவருகிறது. குறிப்பாக ஜிலின் மற்றும் ஹெய்லோங்ஜியாங் ஆகிய மாகாணங்களில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான நோயாளிகள் குணமடைய அதிக நாட்கள் ஆகிறது.

மூத்த மருத்துவர் கூய் ஹைபோ இதுகுறித்து அந்நாட்டு தொலைக்காட்சி சேனலுக்குப் பேட்டி அளித்துள்ளார். அதில், கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு அறிகுறிகள் வெளிப்படையாகத் தென்படுவதற்கு ஆகும் காலமும் கூடியிருக்கிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா நோயாளிகளுக்கு நோய்தொற்று ஏற்பட்ட ஒரு வாரத்திலிருந்து இரண்டு வாரங்களுக்குள் அறிகுறிகள் வெளியே தெரியும் எனச் சொல்லப்படுகிறது. ஆனால் சீனாவின் வடகிழக்கு மாகாணங்களில் இதைவிட அதிக நாட்கள் ஆவதாக ஹைபோ தெரிவிக்கிறார்.

இதனால், கொரோனா வைரஸ் பரவதைக் கட்டுப்படுத்தும் முயற்சி மேலும் கடினமானதாக மாறியுள்ளது எனவும் அவர் சொல்கிறார்.

கொரோனாவின் தன்மை ஒரு குறிப்பிட்ட விதத்தில் மாறுதல் அடைகிறதா என்பதையும் ஆராய்ச்சியாளர்களால் உறுதியாகக் கண்டறிய முடியவில்லை.

You may also like...