சீனாவின் வன விலங்கு மாமிசங்களை சாப்பிடுவதற்கு தடை

Advertisements
வுகான் மார்க்கெட்

வுகான் மார்க்கெட்

சீனாவின் வுகான் நகரில் இருந்து நாவல் கொரோனா வைரஸ் உருவானதாக நம்பப்படுகிறது.

இங்கிருந்து உலக நாடுகளுக்கு பரவிய கொரோனா வைரஸ் இன்னும் மக்களை ஆட்டிப் படைத்து வருகிறது. உலகம் முழுவதும் தொழில் நசிந்து, புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து சொந்த இடங்களுக்கு நடை பயணமாகவும், ரயில் பயணமாகவும் சென்று கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், சீனாவின் மீது உலக நாடுகளின் பார்வை விழுந்துள்ளது. வுகானில் விசாரணை மேற்கொள்ளவும், ஆய்வு மேற்கொள்ளவும் அனுமதிக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கோரி வருகிறார். கொரோனா வைரஸை, சீன வைரஸ் என்றும் ட்ரம்ப் அழைத்து வருகிறார்.

இதற்கிடையே தனி விசாரணை மேற்கொள்ள ஆஸ்திரேலியா ஐநாவின் உலக சுகாதார கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வந்தது. இதை 160க்கும் மேற்பட்ட நாடுகள் ஆதரித்துள்ளன.

இந்த நிலையில் வுகானில் வன விலங்குகளை உணவாக உட்கொள்ள வுகான் அதிகாரபூர்வ தடை விதித்துள்ளது. இங்கு வன விலங்குகளை வேட்டையாடக் கூடாது என்றும் அறிவித்துள்ளது. இங்கு வன விலங்குகளை வளர்க்கவும் கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

You may also like...