சீன நிறுவனங்களை குறிவைத்தே ஒரு மசோதா-அமெரிக்கா

Advertisements

கொரோனா கொள்ளை நோய் உலகம் முழுவதும் பரவியது தொடர்பாக அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே வார்த்தைப் போர் முற்றியுள்ளது. கொரோனாவை சீனாதான் உலகம் முழுவதும் பரப்பிவிட்டதாக அமெரிக்க அரசு ஒருபுறம் குற்றம்சாட்டி வருகிறது. அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சீனாவும் அவ்வப்போது கடுமையாக சாடி வருகிறது.

இந்நிலையில், அமெரிக்க செனட் புதிய மசோதா ஒன்றை தாக்கல் செய்துள்ளது. இந்த மசோதாவின்படி, அமெரிக்காவின் தணிக்கைகள், ஒழுங்குமுறைகளை கடைப்பிடிக்கும் நிறுவனங்கள் மட்டுமே அமெரிக்க பங்குச் சந்தைகளில் இடம்பிடிக்க முடியும். இந்த மசோதா செனட்டில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

எனினும் , பிரதிநிதிகள் அவையிலும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு, அதிபர் ட்ரம்ப் கையொப்பமிட்டால் மட்டுமே சட்டமாக இயற்றப்படும். ‘ இம்மசோதாவின்படி, அமெரிக்க பொது நிறுவன பொறுப்பு வாரியத்தின் தணிக்கைகளுக்கு ஏற்ப, தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு ஒரு நிறுவனம் இணங்காவிடில், அந்நிறுவனம் அமெரிக்க பங்குச் சந்தைகளில் இடம்பெற முடியாது.

இதன்படி, ஒரு நிறுவனம் வெளிநாட்டு அரசால் கட்டுப்படுத்தப்படுகிறதா, அந்நிறுவனத்தில் யாரெல்லாம் உரிமைதாரர்கள் போன்ற விவரங்களை தெரிந்துகொள்ள முடியும். எல்லா வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் இச்சட்டம் பொருந்தினாலும், சீனாவையும், சீன நிறுவனங்களையும் குறிவைத்தே இம்மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

You may also like...