நோய் எதிர்ப்புத் திறனைத் தூண்டுவதன் மூலம்கொரோனா நோயாளிகளை குணமடைய வைக்கமுடியும்-சீனா

Advertisements

சீனாவி ன் கிங் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொரோனா நோயாளிகளை விரைவாக குணமடைய வைக்கவும் முடியும் என்கின்றனர்.

நோய் எதிர்ப்புத் திறனைத் தூண்டிவிடுவதன் மூலமே  கொரோனா வைரஸ்  தொற்றுநோயைக் கட்டுப்படுத்தலாம் என சீனப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவிலிருந்து பரவ ஆரம்பித்தது. இப்போது உலகின் இருநூற்றுக்கு மேற்பட்ட நாடுகளில் பரவி பேரழிவை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது.

இந்தச் சூழலில் சீனாவின் புகழ்பெற்ற பல்கலைக்கழகஙகளில் ஒன்றான பெகிங் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தாங்கள் கண்டுபிடித்துள்ள மருந்தின் மூலம் கொரோனா நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடிவதுடன் விரைவாக குணமடைய வைக்கவும் முடியும் எனக் கூறியுள்ளனர்.

இந்த மருந்தை எலிக்கு செலுத்தி பரிசோதிக்கப்பட்டபோது வெற்றிகரமான முடிவு கிடைத்துள்ளது என பல்கலைக்கழக ஆராய்ச்சி அமைப்பின் இயக்குநர் சன்னி ஜி கூறுகிறார்.

ஆன்டிபாடிகளை எலியின் உடலில் செலுத்திய ஐந்து நாட்களில் அதன் உடலில் உள்ள கொரோனா வைரஸின் வீரியம் பல மடங்கு குறைந்தது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

You may also like...