மிச்சிகன் அணை உடைப்பு-ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்

Advertisements
மிச்சிகன் அணை உடைப்பு

மிச்சிகன் அணை உடைப்பு

அமெரிக்காவில் இரண்டு அணைக்கட்டுகள் உடைந்ததால் ஆயிரக்கணக்கான மக்கள் இருப்பிடத்தை விட்டு வேறு இடங்களுக்குச் சென்றுகொண்டிருக்கிறார்கள்.

அமெரிக்காவின்  மிச்சிகன்  மாகாணத்தில் மிட்லேட் கவுண்டில் உள்ள இரண்டு  அணைகளில் கனமழையால் உடைப்பு கண்டுள்ளன. இதனால், மாகாண ஆளுநர் விட்மெர் மிட்லேண்ட் கவுண்டியில் அவசர நிலையை அறிவித்துள்ளார்.

திட்டாபவாசீ என்ற ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட ஈடன்வைல் மற்றும் சான்போர்டு ஆகிய அணைகளில் புதன்கிழமை உடைப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால், சுமார் 42 ஆயிரம் மக்கள் வசிக்கும் மிட்லேண்ட் கவுண்டி முழுவதும் 9 அடி ஆழத்தில் மூழ்கும் அபாயத்தில் உள்ளது என்று கவர்னர் விட்மெர் தெரிவித்துள்ளார்.

மேலும், அணைகள் உடைப்பினால் வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு ஏற்படப்போகிறது என்றும் மிட்லேண்டில் உள்ள மக்கள் தங்கள் வசிப்பிடத்திலிருந்து உடனே வெளியேற வேண்டும் என்றும் எச்சரித்துள்ளார்.

You may also like...