ஒரே நாளில் 17,296 பேருக்கு கொரோனா-இந்தியா

Advertisements

இந்தியாவில் ஒரே நாளில் 17,296 பேருக்கு கொரோனா பாதிப்பு; மொத்தம் 5 லட்சத்தை நெருங்குகிறது


மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ளதகவலில் 
இதுவரை இல்லாத வகையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 17,296 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. 407 பேர் உயிரிழந்து உள்ளனர்.


மொத்த பாதிப்பு – 4,90,401 ஆக உயர்ந்து 5 லட்சத்தை நெருங்கி உள்ளது. குணமடைந்தவர்கள் – 2,85,636 பேர், மொத்த உயிரிழப்பு 15,301 ஆகும் என கூறப்பட்டு உள்ளது.

இந்தியாவில் ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு கொரோனா பாதிப்பு 33.39 ஆக உள்ளது.  தற்போது உலகில் சராசரி லட்சம் மக்கள் தொகைக்கு  120.21 பாதிப்புகள் உள்ளன.

நாட்டில் ஒரு லட்சம் மக்கள்தொகைக்கு இறப்புகள் 1.06 ஆக உள்ளது.இது உலக சராசரியான இறப்புகள் 6.24 விட மிகக்குறைவு ஆகும்  என மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

You may also like...