சசிகலா ஆகஸ்ட் 14ஆம் தேதி சிறையிலிருந்து விடுதலை ஆகிறார்

Advertisements

“ஆகஸ்ட் 14 சசிகலா ரிலீஸ் இல்லை” சிறைத்துறை அளித்த தேதி விவரம், இதோ!“ஆகஸ்ட் 14 சசிகலா ரிலீஸ் இல்லை” சிறைத்துறை அளித்த தேதி விவரம், இதோ!முன்னாள் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா ஆகஸ்ட் 14ஆம் தேதி சிறையிலிருந்து விடுதலை செய்யப்படுவார் என்ற செய்தி பொய் எனக் கர்நாடக சிறைத் துறை விளக்கம் அளித்துள்ளது.

சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா உள்ளிட்ட நான்கு பேருக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனையைக் கர்நாடக நீதிமன்றம் வழங்கியது.

நீதிமன்ற உத்தரவுப்படி சசிகலா, 2017 பிப்ரவரி மாதம் சிறையில் அடைக்கப்பட்டார். சசிகலாவின் தண்டனை காலம் 2021ஆம் ஆண்டு மார்ச் 21ஆம் தேதி நிறைவடையும்.

இந்நிலையில், ஆகஸ்ட் 14ஆம் தேதி சிறையிலிருந்து விடுதலை செய்யப்படுவார் என ஒரு தகவல் நேற்று வெளியாகி தீயாகப் பரவியது. இதுகுறித்து கர்நாடக சிறைத்துறையிடம் செய்தி நிறுவனங்கள் விசாரித்தபோது பல்வேறு விளக்கங்களை அதிகாரிகள் வழங்கினர்.

அதிகாரிகள், “குற்றவாளி ஒருவரை விடுதலை செய்வதற்கு முன் பல விதிமுறைகள் உள்ளது. ஒருவேளை தண்டனை காலம் குறைக்கப்படுகிறது என்றால், அதுகுறித்து உயர் அதிகாரிகள் வழிகாட்டுதல் வேண்டும். இதைக் கணக்கிடும்போது, அவர்கள் பரோல் பெற்ற நாட்கள், பல விஷயங்கள் குறித்துப் பரிசீலிக்கப்படும்” என்றனர்.

You may also like...