நெக்னா மலைக்கு-விடிவுகாலம்

Advertisements
நெக்னா மலையில் போடப்பட்டுள்ள புதிய சாலை

நெக்னா மலையில் போடப்பட்டுள்ள புதிய சாலை

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் அமைந்திருக்கிறது, நெக்னா மலைக் கிராமம். இங்கு, 140 குடும்பங்கள் உள்ளன. நெக்னாவுக்குச் செல்ல வேண்டுமெனில், மலையடிவாரத்திலிருந்து 4 கிலோமீட்டர் தூரம் நடைப்பயணமாகத்தான் செல்ல வேண்டும். நோயுற்றவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், வயதானவர்களை டோலி கட்டி தூக்கிச் செல்ல வேண்டிய அவலநிலையில் இருந்தனர், நெக்னா மலை மக்கள்.

குழந்தைக்கு இனிப்பு ஊட்டும் அமைச்சர் வீரமணி
குழந்தைக்கு இனிப்பு ஊட்டும் அமைச்சர் வீரமணி

சாலை வசதி அமைத்துத் தரக்கோரி சுமார் 72 ஆண்டுகளாகப் போராடி வந்தனர். சாலை இல்லாத ஒரே காரணத்தினால், இங்கிருந்து யாரும் பெண் எடுப்பதும் இல்லை, வெளியிலிருந்து பெண் கொடுப்பதும் இல்லை. திருமண வயதைக் கடந்தும் பல பேர் திருமணம் ஆகாமல் உள்ளனர். கல்வி, மருத்துவம் எட்டாக்கனியாக இவர்களுக்கு இருந்தது. இந்த நிலையில், நீண்ட கால போராட்டத்திற்குப் பிறகு விடியலை நோக்கி நகர்ந்திருக்கிறது, நெக்னா மலைக் கிராமம்.

சாலையை பார்வையிடும் அமைச்சர்கள்
சாலையை பார்வையிடும் அமைச்சர்கள்

அதைத்தொடர்ந்து, ஊரக வளர்ச்சித்துறையின் உதவியுடன் நெக்னா மலை மக்களே சாலை அமைக்கும் பணியில் களமிறங்கினர். 3 வாரங்களில் மலையைக் குடைந்து மலை உச்சிக்கு கார் செல்லக்கூடிய வகையில் மண் சாலையை அமைத்துள்ளனர். இதையடுத்து, அமைச்சர்கள் வீரமணி, நிலோஃபர் கபில், கலெக்டர் சிவன் அருள், எஸ்.பி விஜயகுமார் ஆகியோர் காரில் சென்று சாலை வசதியைப் பார்வையிட்டனர். மகிழ்ச்சியில் திளைத்திருந்த மலை கிராம மக்களுக்குக் 150 கிலோ இனிப்புகளை வழங்கி அமைச்சர்கள் உற்சாகப்படுத்தினர்.

You may also like...