போலீஸ் குடும்பத்துக்கு பால் கிடையாது

Advertisements

“போலீஸ் குடும்பத்துக்கு பால் கிடையாது” பால் முகவர்கள் திட்டவட்டம்!

பால் முகவர்கள்,போலீஸ் இருதரப்புக்கும் இடையே உள்ள பிரச்சினையை தீர்க்கும் வரை பால் விநியோகம் கிடையாது என திட்டவட்டம்

போலீஸ் குடும்பத்துக்கு பால் கிடையாது” பால் முகவர்கள் திட்டவட்டம்!இனி போலீஸ் வீடுகளுக்குப் பால் விநியோகம் செய்யப்படாது எனப்பால் முகவர்கள் சங்கம் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் சுமார் ஒன்றரை லட்சப்பால் முகவர்கள்உள்ளனர். ஊரடங்கு அமல்படுத்தப்பட்டபோதிருந்த போலீசார் ஏற்படுத்தும் சிக்கல் காரணமாக பால் விநியோகம் செய்வதில் பல சிக்கல்கள் நீடித்து வருவதாகக் கூறப்பட்டது.

இந்த சூழலில் பால் முகவர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “பால் முகவர்களுக்கும் போலீசுக்கும் ஏற்படும் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும் வரை போலீஸ் வீடுகளுக்குப் பால் விநியோகம் செய்யப்படாது. தடுத்து நிறுத்தப்படும்” எனக் கூறியுள்ளது.

You may also like...