ஏடிஎம் -புதிய விதிமுறைகள் அமல்

Advertisements
samayam tamil

தற்போது கொரோனா ஊரடங்கு தளர்ந்து இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில் மக்களுக்கான பணப்பரிவர்த்தனைகள் கடுமையாகவுள்ளன. ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கு இனி வாடிக்கையாளர்கள் கூடுதலாகச் செலவிடவேண்டியிருக்கும். ஜூலை 1 முதல் புதிய விதிமுறைகள் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டு

ள்ளது. ஊரடங்கு காலத்தில் ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கான கட்டணம் மூன்று மாதங்களுக்கு ரத்து செய்யப்படுவதாக மத்திய நிதியமைச்சகம் அறிவித்திருந்த நிலையில், ஜூலை 1 முதல் கட்டணம் வசூலிக்கப்படவுள்ளது.

ஊரடங்கு காலத்துக்கு முன்னர் இருந்த விதிமுறைகள் அப்படியே மீண்டும் அமலுக்கு வருகின்றன. அதாவது ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கு எந்தெந்த வங்கிகள் எவ்வளவு கட்டணம் வசூலித்தனவோ, அதே கட்டணம் ஜூலை 1 முதல் மீண்டும் வசூலிக்கப்படும். வெவ்வேறு வங்கிகளைப் பொறுத்து ஏடிஎம் கட்டணங்கள் மாறுபடுகின்றன.

உதாரணமாக, இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில், 5 பரிவர்த்தனைகள் எஸ்பிஐ ஏடிஎம்களிலும், 3 பரிவர்த்தனைகள் இதர வங்கிகளிலும் இலவசமாக மேற்கொள்ளலாம். அதன் பின்னர் எடுக்கும் பணத்துக்கு ஒரு முறைக்கு ரூ.20 கட்டணமாக வசூலிக்கப்படும். அதோடு ஜிஎஸ்டியும் சேர்த்து வசூலிக்கப்படுகிறது. பணமில்லாத இதர பரிவர்த்தனைகளுக்கு ரூ.8 மற்றும் ஜிஎஸ்டி சேர்த்து வசூல் செய்யப்படுகிறது.

You may also like...