தமிழகம்-முக்கிய செய்திகள்

Advertisements

தமிழகத்தின் வட மாவட்டங்களான சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் அதிகப்படியான வைரஸ் தொற்று காணப்படுகிறது. இதையொட்டி இந்த மாவட்டங்களில் வரும் 30ஆம் தேதியுடன் முழு ஊரடங்கு அமலில் இருக்கிறது. இதையொட்டி மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி நாளை ஆலோசனை நடத்துகிறார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில் சென்னை மற்றும் மதுரையில் இன்று தளர்வுகளின்றி முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. எனவே பொதுமக்கள் வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

விழுப்புரம் தொகுதி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ கிருஷ்ணன் காலமானார். இவர் எம்.ஜி.ஆர் ஆட்சியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர்.

சென்னையில் முழு ஊரடங்கை மீறியதால் 56,583 பேர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில் முகக் கவசம் அணியாதவர்கள், தனிமனித இடைவெளியை பின்பற்றாதவர்கள் என 22,723 வழக்குகள் அடங்கும். ஊரடங்கு விதிமுறைகளை பின்பற்றாத 49,848 வாகனங்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

தமிழகத்தில் நாளை முதல் ஜூலை 15ஆம் தேதி வரை சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

You may also like...