லாக்அப் மரணங்கள் அதிரும் இந்தியா – ஆர்.கே.

Advertisements

இம்மாதம் ஜுன் 19 ம் தேதி து£த்துகுடி மாவட்டத்தில் உள்ள சாத்தான்குளம் என்ற கிராமத்தில் நடந்த லாக்அப் மரணம், முழு இந்தியாவையும் அதிர வைத்துள்ளது. காரணம் பொது ஊரடங்கை மீறியதாக கூறி சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவர் விசாரணைக்காக போலீஸ் ஸ்டேஷன் கொண்டு செல்லப்பட்டு அடித்து கொலை செய்யப்பட்டதாக புகார் எழுந்து, ஒட்டு மொத்தமாக சாத்தான்குளம் போலீசார் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சம்பந்தப்பட்ட போலீசார் சஸ்பண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியா எங்கும் லாக்அப் மரணங்கள் நடந்தாலும், அதில் முதல் இடத்தில் உத்திர பிரதேசமும், இரண்டாவது இடத்தில் தமிழகமும் உள்ளது. அதில் இம்மரணம் நடந்தது இந்திய முழுமைக்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருப்பது ஒன்றுக்கு, இரண்டு பேர் மரணம் அடைந்துள்ளனர். அதில் குறிப்பாக ஒரே குடும்பத்தைச் «ச்ர்ந்த தந்தையும், மகனும் என்பதும் மேலும் ஒரு சாதாரண குற்றத்திற்கு இத்தகைய நடமுறையை போலீசார் பின்பற்றியது கடும் கண்டத்துக்குள்ளாகி உள்ளது.

குறிப்பாக இவ்வழக்கில் நடக்க வேண்டிய சட்ட நடைமுறைகள் முற்றிலுமாக து£க்கி எறியப்பட்டுள்ளது. பொய்யாக வழக்கு ஜோடிகக்கப்பட்டு, அதில் எந்த கவனத்தையும் செலுத்தாத சாத்தான்குளம் மாஸிஸ்திரேட் மற்றும் கோவில்பட்டி ஜெயில் அதிகாரிகள். குற்றம்சாட்டப்பட்டவர்களை பரிசோதித்த டாக்டர்கள் என பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. காரணம் இவர்கள் அனைவரும் சட்டத்தைக் குப்பையில் து£க்கி எறிந்துவிட்டு, தான்தோன்றித்தனமாக நடந்துள்ளனர். போலீசார் சொன்ன இடத்தில் கையெழுத்தை போட்டுள்ளனர். போலீசாருக்கு உடந்தையாக இருந்துள்ளனர். இது ஒரு கூட்டுச் சதி செய்து இக்கொலை நடந்துள்ளதாக தன்னார்வலர்களும், பத்திரிக்கை செய்திகளும் சொல்லுகிறது. இந்தியா முழுமைக்கும் இச்செய்தி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

மேற்படி தந்தையும், மகனின் மரணத்திற்கு மக்கள் கொடுத்த அழுத்தம் காரணமாகவும், உலகமே உற்றுப் பார்க்கும் வழக்காக மாறியதாலும், ஆளும் எடப்பாடி அரசாங்கம், உயிரழந்தவர்கள் குடும்பத்திற்கு 20 லட்சம் இழப்பீடும், அரசு வேலையும் வழங்கியுள்ளது. சம்பந்தப்பட்ட போலீசார் மீது அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கும் முன், மதுரை நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கை பதிவு செய்து நடத்தி வருவதால், ஆளும் அரசு இக்கட்டீல் உள்ளது.

இம்மரணத்திற்குப் பின்பாகவும் லாக்அப் மரணங்களின் எண்ணிக்கை தமிழகத்தில் தொடந்து வருவது செய்தியாக வந்து கொண்டு உள்ளன. இது தமிழக மக்களுக்கு பெரும் அச்சத்தையும், ஆளும் எடப்பாடி அரசு மீது அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது.

போலீசார் காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொள்ளுவதற்கு, அவர்களின் பணி பளுவும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. 2006ல் உச்ச நீதிமன்றம் போலீஸ் மறுகட்டமைவுக்கான வழிகாட்டுதல்களை நடைமுறைப்படுத்தச் சொல்லி உத்தரவிட்டும், பல முறை எடுத்துச் சொல்லியும், எந்த மாநில அரசுகளும் அதை நடைமுறைப்படுத்தவில்லை என்பது போலீசார் மீது எத்தகைய பரிவை இந்த அரசாங்கங்கள் காட்டுகிறது என்பதை எடுத்துக் காட்டுகிறது.

போலீசார் மீது மக்கள் நம்பிக்கை வைக்க வேண்டும் என்றால், போலீஸ் பணி சீர்திருத்தம் உடனடியாக செய்யப்பட வேண்டியுள்ளது. இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப செய்ய வேண்டிய சீர்திருத்த நடவடிக்கைகளை செய்தால் மட்டுமே இதற்கான தீர்வு கிடைக்கப் பெறும். இல்லை என்றால் லாக்அப் மரணங்கள் தொடர்ந்து நடப்பதை அரசாங்களும் எந்த சட்டங்களை போட்டும் தடுக்க முடியாது.

You may also like...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com