10,000 அமெரிக்கர்களுக்கு வேலை – இன்ஃபோசிஸ்

Advertisements

கொரோனாவால் அமெரிக்காவில் பல லட்சம் பேர் வேலையில்லாமல் தவித்து வருவதால் அங்கு வேலையின்மை விகிதம் வரலாறு காணாத அளவு அதிகரித்துள்ளது. எனவே அமெரிக்கர்களுக்கான வேலைவாய்ப்புகளை உறுதிசெய்யும் விதமாக, அங்கு வெளிநாட்டினர்களுக்கான வேலைவாய்ப்புகளைக் குறைக்கும் நோக்கத்தில் அமெரிக்க அரசு இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

இந்தத் தடை உத்தரவானது ஜூன் 24 முதல் அமலுக்கு வந்துள்ளது. அமெரிக்க அரசின் இந்தத் தடை உத்தரவுக்கு இந்திய ஐடி நிறுவனங்கள் தரப்பில் எதிர்ப்புகள் வரவில்லை. ஆனால் விசா மூலம் ஊழியர்களை அமர்த்துவதை விடுத்து உள்நாட்டில் உள்ள ஊழியர்களை ஐடி நிறுவனங்கள் அதிகம் பயன்படுத்தும் என்று கருதப்படுகிறது.

அதன்படியே, இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் இதுவரையில் 10,000க்கும் மேற்பட்ட அமெரிக்கர்களுக்கு வேலை வழங்கியுள்ளதாக அந்நிறுவனத்தின் தலைவர் நந்தன் நிலேகனி தெரிவித்துள்ளார்.

முன்னதாக 2017ஆம் ஆண்டில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் அப்போதைய தலைமைச் செயலதிகாரியான விஷால் சிக்கா, அமெரிக்காவில் 10,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவோம் என்று கூறியிருந்தர். இதற்காக அங்கு நான்கு தொழில்நுட்ப மையங்களையும் புத்தாக்க மையங்களையும் திறப்பதாகத் தெரிவித்திருந்தார்.

இன்ஃபோசிஸ் நிறுவனம் உறுதியளித்தபடியே மூன்று ஆண்டுகளுக்குள் 10,000க்கும் மேற்பட்ட அமெரிக்கர்களுக்கு அந்நிறுவனம் வேலைவாய்ப்பு வழங்கியுள்ளது. தற்போது விசா கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதால் இந்தியா உள்ளிட்ட மற்ற நாட்டவருக்கான வேலைவாய்ப்புகள் குறைந்துள்ள நிலையில் இன்ஃபோசிஸ் நிறுவனம் இன்னும் அதிகமான அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் அமெரிக்கா சென்று வேலை பார்க்கும் கனவோடு இருக்கும் இந்தியர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

You may also like...