சீனாவில் வசிக்கும் இந்தியர்கள்

Advertisements

மற்ற நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான இந்தியர்கள் சொந்த ஊர் திரும்பியதை காண முடிந்தது. ஆனால் தொடர்ந்து அங்கேயே இருக்க விரும்புகின்றனராம். ஷென்ஸென் நகரில் ஷாஷி என்பவரின் குடும்பம் வசித்து வருகிறது. இவருடன் மனைவி லி லான்  மற்றும் இரண்டு குழந்தைகள் ஆகியோர் தங்கியுள்ளனர். இதில் ஷாஷி பெங்களூருவைச் சேர்ந்தவர்.

இவர் டைம்ஸ் ஆப் இந்தியாவிற்கு தொலைபேசி மூலம் பேசுகையில், எங்களுக்கு எந்தவித பயமும் இல்லை. இங்கு அனைத்து சுதந்திரமும் இருக்கிறது. உள்ளூர் நிர்வாகத்துடன் எந்தவித பிரச்சினையும் இல்லை. அப்புறம் எதற்காக நாங்கள் இந்தியா திரும்ப வேண்டும் என்று கூறியுள்ளார்.
samayam tamilIndians in China

கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு தென் சீனாவிற்கு சென்ற ஷாஷி அங்கேயே செட்டில் ஆகிவிட்டார். “Shashi4x” என்ற பெயரில் யுடியூப் சேனல் நடத்தி வருகிறார். எல்லையில் இருநாட்டு ராணுவத்தில் யாருக்கு வெற்றி, தோல்வி என்றாலும் எங்களுக்கு ஒரு இழப்பும் இல்லை என்று தைரியமாக கூறுகின்றனர்.

கொரோனா அச்சுறுத்தல் காலத்தில் தாங்கள் அமைதியாக வாழ்ந்து வருவதாக லி லான் தெரிவித்துள்ளார். கடந்த 2010ஆம் ஆண்டு சீனாவில் எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, அந்நாட்டில் 6 லட்சம் வெளிநாட்டவர்கள் வசித்து வருகின்றனர். இந்த எண்ணிக்கை தற்போது 10 லட்சமாக அதிகரித்துள்ளது. இதில் இந்தியர்களின் எண்ணிக்கை 3 சதவீதமாகும்.

தாலியனில் எந்தவித பதற்றமும் இல்லை என்று மறுத்துள்ள மென்பொருள் பொறியாளர் குமார், சீனாவின் லியோனிங் மாகாணத்தின் வடக்கே வசித்து வருகிறோம். இங்கு எந்தவித பயமும் இல்லை. 98 சதவீத இயல்பு நிலை திரும்பிவிட்டது. உலகமே கொரோனாவால் அச்சத்தில் இருக்கும் சூழலில் எங்கள் பகுதியில் முழுவதுமாக வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எல்லையில் நடந்த விஷயங்கள் தொடர்பாக தொலைக்காட்சி செய்திகளில் பார்த்தோம்.

வழக்கமாக நான் படிக்கும் இந்திய செய்தி நிறுவனத்தின் இணையதளத்தை மட்டும் என்னால் பார்க்க முடியவில்லை. சீன ஊடகங்களைப் பொறுத்தவரை இந்தியாவின் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றன. இருநாடும் தங்கள் தரப்பை நியாயப்படுத்தும் வகையில் செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன என்றார்.

டெல்லி – என்சிஆரைச் சேர்ந்த குமார் அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ”ஆர்டெக் சீனா” என்ற நிறுவனத்தின் கிளையில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 2008ஆம் ஆண்டு முதல் தாலியனில் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது. தாலியன் ஐடி பூங்காவில் 15,000 இந்திய மென்பொருள் பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.

இதுபற்றி அமெரிக்க மென்பொருள் நிறுவனம் ஒன்றின் தாலியன் கிளையில் பணியாற்றி வரும் விஜய் என்பவர் கூறுகையில், சமூக வலைத்தளங்களில் தேவையற்ற புரளியை கிளப்புகிறார்கள். உள்ளூர் மக்கள் எங்களுடன் நட்பாக பழகி வருகின்றனர். இந்தியர்கள் மீது அனைவரும் மிகுந்த மதிப்பு வைத்துள்ளதாக தெரிவித்தார்.

திருப்பூரைச் சேர்ந்த எஸ்.ஏ ஓவியா என்ற நபர் தாலியன் மருத்துவ பல்கலைக்கழகத்தில் அறுவை சிகிச்சை தொடர்பான படிப்பை பயின்று வருகிறார். டிசம்பர் மாத விடுமுறைக்காக சொந்த ஊர் திரும்பியுள்ளார். இவரது தந்தை பொது சுகாதார மையத்தில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தனது மகள் படிப்பை முழுவதுமாக முடிக்க வேண்டும் என்று தீவிரமாக இருக்கிறார். எப்போது தாலியனுக்கு செல்ல வாய்ப்பு கிடைக்கும் என்று ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்.

இந்தியாவுடன் எல்லை மோதலில் பதற்றம் வெடித்தாலும் சீனாவில் வேலையை தக்க வைத்துக் கொள்ளும் எண்ணத்தில் தவறில்லை என்று அந்நாட்டில் பணிபுரியும் இந்தியர்கள் கூறுகின்றனர். இதனால் நாங்கள் ஒருபோதும் துரோகிகள் ஆகிவிடப் போவதில்லை. அதேசமயம் இந்தியாவின் மீதான தேசப் பக்தியையும் குறைத்துவிடாது என்று தெரிவித்துள்ளனர்.

You may also like...